தொடர்ந்து படிக்கread this section continuously
தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாந் தலைவனிருக்கின்ற தன்மையை யேது முணரார்பிரிக்கின்ற விந்தப் பிணக்கறுத் தெல்லாங்கரிக்கொன்ற வீசனைக் கண்டுகொண் டேனே.
உரைmeaning
வினைகளைத் தீர்ப்பதற்காக உடலை எடுத்து வருகின்ற பல விதமான உயிர்கள் எல்லாவற்றுக்கும் தலைவனாகிய இறைவன், அந்த உயிர்களுக்குள்ளேயே மறைந்து இருக்கின்ற தன்மையைச் சிறிது அளவும் உணராமல் இருக்கின்றார்கள் உலகத்தவர்கள். இறைவனையும் ஆன்மாவையும் மாயையால் பிரித்து வைத்திருக்கின்ற இந்த உலகப் பற்றுகள், ஆசைகள், பாசம் எனும் தளைகளை எல்லாம் அறுத்துவிட்டு, தான் எனும் அகங்காரத்தைக் கொன்று, தனக்குள் இருப்பது ஈசனே என்பதையும், அவனே அனைத்திற்கும் தலைவனாகவும் இருக்கின்றான் என்பதையும் யான் கண்டுகொண்டேனே.
The people of the world do not realize even a little that God, who is lord of all the many kinds of lives that take a body in order to work out their deeds, lies hidden within those very lives. Cutting away all these bonds, the worldly attachments and desires and clinging that keep God and the soul apart through illusion, and killing the self-regard that says I, I have seen for myself that the one within me is Isan, and that he is the lord of all.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
வினைகளைத் தீர்ப்பதற்காக உடலை எடுத்து வருகின்ற பல விதமான உயிர்கள் எல்லாவற்றுக்கும் இறைவனே தலைவனாக இருக்கின்றான்.
God is the lord of all the many kinds of lives that take a body in order to work out their deeds.
- வரி 2Line 2
அவன் அந்த உயிர்களுக்குள்ளேயே மறைந்து இருக்கின்ற தன்மையைச் சிறிது அளவும் உணராமல் இருக்கின்றார்கள் உலகத்தவர்கள்.
The people of the world do not realize even a little that he lies hidden within those very lives.
- வரி 3Line 3
இறைவனையும் ஆன்மாவையும் மாயையால் பிரித்து வைத்திருக்கின்ற இந்த உலகப் பற்றுகள், ஆசைகள், பாசம் எனும் தளைகளை எல்லாம் அறுத்துவிட வேண்டும்.
All these bonds, the worldly attachments and desires and clinging that keep God and the soul apart through illusion, are to be cut away.
- வரி 4Line 4
அவ்வாறு அறுத்து, தான் எனும் அகங்காரத்தைக் கொன்று, தனக்குள் இருப்பது ஈசனே என்பதையும், அவனே அனைத்திற்கும் தலைவனாகவும் இருக்கின்றான் என்பதையும் யான் கண்டுகொண்டேனே.
Cutting them away so, and killing the self-regard that says I, I have seen for myself that the one within me is Isan, and that he is the lord of all.
திருமந்திரம் பாடல் #1589
1 / 2





