திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1588

ஆறாம் தந்திரம்1. சிவகுரு தரிசனம்

தொடர்ந்து படிக்கread this section continuously

அறிந்துணர்ந் தேனிவ் வகலிட முற்றுஞ்செறிந்துணர்ந் தோதித் திருவருள் பெற்றேன்மறந்தொழிந் தேன்மதி மானிடர் வாழ்க்கைபிறந்தொழிந் தேனிப் பிறவியை நானே.

உரை

இந்தப் பரந்து விரிந்து இருக்கின்ற உலகம் முழுவதிலும் உள்ள பொருள்களை முழுமையாக அறிந்து உணர்ந்துகொண்டேன். அந்த அனைத்துப் பொருளுக்குள்ளும் சிறப்பாக விளங்குகின்ற உண்மைப் பொருளான இறைவனை உணர்ந்துகொண்டு, அந்த இறைவனை ஓதித் திருவருளையும் பெற்றுக்கொண்டேன். பிற மனிதர்களின் வாழ்க்கையைத் தன்னுடைய வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்து நடக்கின்ற தன்மையை மறந்து ஒழித்துவிட்டேன். அவர்களை விட்டுப் பிரிந்து, உலகப் பற்றுகளை எல்லாம் ஒழித்துவிட்டு, இந்தப் பிறவியையும் நீங்கிவிட்டேன்.

வரி வாரியாக

  • வரி 1

    இந்தப் பரந்து விரிந்து இருக்கின்ற உலகம் முழுவதிலும் உள்ள பொருள்களை முழுமையாக அறிந்து உணர்ந்துகொண்டேன்.

  • வரி 2

    அந்த அனைத்துப் பொருளுக்குள்ளும் சிறப்பாக விளங்குகின்ற உண்மைப் பொருளான இறைவனை உணர்ந்துகொண்டு, அந்த இறைவனை ஓதித் திருவருளையும் பெற்றுக்கொண்டேன்.

  • வரி 3

    பிற மனிதர்களின் வாழ்க்கையைத் தன்னுடைய வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்து நடக்கின்ற தன்மையை மறந்து ஒழித்துவிட்டேன்.

  • வரி 4

    அவர்களை விட்டுப் பிரிந்து, உலகப் பற்றுகளை எல்லாம் ஒழித்துவிட்டு, இந்தப் பிறவியையும் நீங்கிவிட்டேன்.

திருமந்திரம் பாடல் #1588

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout