தொடர்ந்து படிக்கread this section continuously
சிவமான ஞானந் தெளியவொண் சித்திசிவமான ஞானந் தெளியவு முத்திசிவமான ஞானஞ் சிவபர தேகுஞ்சிவமான ஞானஞ் சிவானந்த நல்குமே.
உரைmeaning
சிவமாகவே ஆகிவிட்ட பேரறிவு ஞானத்தினால் அடியவரின் மனமும் முழுமையாகத் தெளிவு பெற்று, அவரது மனம் இறைவனோடு ஒன்றி இருக்கும்போது, அனைத்து விதமான சித்திகளையும் அவர் பெற்றுவிடுவார். அப்படி அவரது மனம் தெளியும்போதே, அடியவர் விடுதலை எனும் முக்தி நிலையையும் பெற்றுவிடுவார். அப்போது, சிவத்தின் பரம்பொருள் இருக்கின்ற பரவெளியில் தாமும் சென்று அடைகின்ற நிலையையும் அடியவர் பெற்றுவிடுவார். அதன் பிறகு, சிவமாகவே ஆகிவிட்ட அந்தப் பேரறிவு ஞானமே சிவத்தின் பேரானந்த நிலையையும் அடியவருக்குக் கொடுக்கும்.
By the great wisdom that has itself become Sivam, the devotee's mind too gains complete clarity, and when his mind stands joined as one with God he comes by every kind of siddhi. In that very clearing of his mind the devotee also comes by the state of liberation, which is release. Then he comes by the state of going himself and reaching the vast expanse where the supreme being of Sivam is. And after that, the same great wisdom which has become Sivam gives the devotee the state of the great bliss of Sivam.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
சிவமாகவே ஆகிவிட்ட பேரறிவு ஞானத்தினால் அடியவரின் மனமும் முழுமையாகத் தெளிவு பெற்று, அவரது மனம் இறைவனோடு ஒன்றி இருக்கும்போது, அனைத்து விதமான சித்திகளையும் அவர் பெற்றுவிடுவார்.
By the great wisdom that has itself become Sivam the devotee's mind too gains complete clarity, and when his mind stands joined as one with God he comes by every kind of siddhi.
- வரி 2Line 2
அப்படி அவரது மனம் தெளியும்போதே, அடியவர் விடுதலை எனும் முக்தி நிலையையும் பெற்றுவிடுவார்.
In that very clearing of his mind the devotee also comes by the state of liberation, which is release.
- வரி 3Line 3
அப்போது, சிவத்தின் பரம்பொருள் இருக்கின்ற பரவெளியில் தாமும் சென்று அடைகின்ற நிலையையும் அடியவர் பெற்றுவிடுவார்.
Then he comes by the state of going himself and reaching the vast expanse where the supreme being of Sivam is.
- வரி 4Line 4
அதன் பிறகு, சிவமாகவே ஆகிவிட்ட அந்தப் பேரறிவு ஞானமே சிவத்தின் பேரானந்த நிலையையும் அடியவருக்குக் கொடுக்கும்.
After that, the same great wisdom which has become Sivam gives the devotee the state of the great bliss of Sivam.
திருமந்திரம் பாடல் #1587
1 / 2





