திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1586

ஆறாம் தந்திரம்1. சிவகுரு தரிசனம்

தொடர்ந்து படிக்கread this section continuously

பின்னெய்த வைத்ததோ ரின்பப் பிறப்பினைமுன்னெய்த வைத்த முதல்வனே யெம்மிறைதன்னெய்துங் காலத்துத் தானே வெளிப்படுமன்னெய்த வைத்த மனமது தானே.

உரை

அடியவர்கள் தாங்கள் செய்கின்ற சாதகங்களால் பெற்ற புண்ணியத்தின் பயனால், பிறகு எடுக்கின்ற ஏதோ ஒரு பிறவியில் அடையக்கூடிய, துன்பமில்லாத இன்பமான பிறவியை, இந்தப் பிறவியிலேயே அடையும்படி கொடுத்து அருளுவதும், இந்தப் பிறவியை எடுப்பதற்கு முன்பே அந்த நிலையை அடையும்படி வைத்து அருளியதும், அனைத்திற்கும் முதல்வனாக இருக்கின்ற எமது இறைவனே ஆகும். அந்த இன்பமான பிறவியிலும் ஆசைகளின் மேல் செல்லாமல் இறைவன் மேல் எண்ணம் வைக்கின்ற நிலையை அடியவர் தாமும் அடையும் காலத்தில், இறைவன் தாமே அடியவருக்குள்ளிருந்து வெளிப்பட்டு, என்றும் அவனை விட்டு நீங்காமல் உறுதியாக அவனையே பற்றிக்கொண்டிருக்கின்ற உறுதியான மன வலிமையை அடையும்படி செய்து அருளுகின்றார்.

வரி வாரியாக

  • வரி 1

    அடியவர்கள் தாங்கள் செய்கின்ற சாதகங்களால் பெற்ற புண்ணியத்தின் பயனால், பிறகு எடுக்கின்ற ஏதோ ஒரு பிறவியில் அடையக்கூடிய, துன்பமில்லாத இன்பமான பிறவியை, இந்தப் பிறவியிலேயே அடையும்படி கொடுத்து அருளுகின்றான்.

  • வரி 2

    இந்தப் பிறவியை எடுப்பதற்கு முன்பே அந்த நிலையை அடையும்படி வைத்து அருளியதும், அனைத்திற்கும் முதல்வனாக இருக்கின்ற எமது இறைவனே ஆகும்.

  • வரி 3

    அந்த இன்பமான பிறவியிலும் ஆசைகளின் மேல் செல்லாமல் இறைவன் மேல் எண்ணம் வைக்கின்ற நிலையை அடியவர் தாமும் அடையும் காலத்தில், இறைவன் தாமே அடியவருக்குள்ளிருந்து வெளிப்படுகின்றார்.

  • வரி 4

    அப்போது, என்றும் அவனை விட்டு நீங்காமல் உறுதியாக அவனையே பற்றிக்கொண்டிருக்கின்ற உறுதியான மன வலிமையை அடியவர் அடையும்படி செய்து அருளுகின்றார்.

திருமந்திரம் பாடல் #1586

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout