திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1592

ஆறாம் தந்திரம்2. திருவடிப் பேறு

தொடர்ந்து படிக்கread this section continuously

தானவ னாதிச் சொரூபத் துள்வந்திட்டுவானச் சொரூபங் கணான்கு மகன்றறவேனைய முத்திரை யீறாண்ட னனந்திதானடி முற்சூட்டித் தாபித்த துண்மையே.

உரை

அடியவருக்கு இறைவன், தமது ஆதியில் இருக்கின்ற சுய ரூபமாகிய ஜோதியை அவரின் உள்ளத்திற்குள் வந்து வைத்து அருளுகின்றார். அப்போது, இறைவனாகவே ஆகிவிட்ட அடியவரின் பஞ்ச கோசங்களாகிய சுய ரூபங்களில், அன்னம், பிராணன், மனம், விஞ்ஞானம் ஆகிய நான்கும் விலகிச் சென்று நீங்கிவிட, மீதி இருக்கின்ற ஆனந்தமய கோசத்தையே முத்திரையாக வைத்து, அதையே தமக்கு எல்லையாகக் கொண்டு ஆண்டு அருளுகின்றான் குருவாக இருக்கின்ற இறைவன். அந்தக் குருநாதனாகிய இறைவன், பாடல் 1590 இல் கூறியபடி தமது திருவடியை முன்னரே அடியவரின் தலை மேல் கிரீடமாகச் சூட்டி, அடியவருக்குள் உறுதியாக நிலைநிறுத்தியது பேருண்மையே ஆகும்.

வரி வாரியாக

  • வரி 1

    அடியவருக்கு இறைவன், தமது ஆதியில் இருக்கின்ற சுய ரூபமாகிய ஜோதியை அவரின் உள்ளத்திற்குள் வந்து வைத்து அருளுகின்றார்.

  • வரி 2

    அப்போது, இறைவனாகவே ஆகிவிட்ட அடியவரின் பஞ்ச கோசங்களாகிய சுய ரூபங்களில், அன்னம், பிராணன், மனம், விஞ்ஞானம் ஆகிய நான்கும் விலகிச் சென்று நீங்கிவிடுகின்றன.

  • வரி 3

    மீதி இருக்கின்ற ஆனந்தமய கோசத்தையே முத்திரையாக வைத்து, அதையே தமக்கு எல்லையாகக் கொண்டு ஆண்டு அருளுகின்றான் குருவாக இருக்கின்ற இறைவன்.

  • வரி 4

    அந்தக் குருநாதனாகிய இறைவன், பாடல் 1590 இல் கூறியபடி தமது திருவடியை முன்னரே அடியவரின் தலை மேல் கிரீடமாகச் சூட்டி, அடியவருக்குள் உறுதியாக நிலைநிறுத்தியது பேருண்மையே ஆகும்.

திருமந்திரம் பாடல் #1592

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout