திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1575

ஆறாம் தந்திரம்1. சிவகுரு தரிசனம்

தொடர்ந்து படிக்கread this section continuously

சித்திக ளெட்டோடுந் திண்சிவ மாக்கியசுத்தியு மெண்முத்தி தூய்மையும் யோகத்துச்சத்தியு மந்திரஞ் சாதகம் போதமும்பத்தியு நாத னருளிற் பயிலுமே.

உரை

மாபெரும் சித்திகளாகிய அட்டமா சித்திகளோடு உறுதியான சிவப் பரம்பொருளாகவே அடியவரையும் ஆக்குவதற்குப் பல விதமான சோதனைகளைச் செய்து பெற்ற பக்குவமும், பல விதமான எண்ணங்களிலிருந்து விடுதலை அடைந்து மோன நிலையில் எண்ணங்கள் இல்லாமல் நிற்கின்ற தூய்மையான மனமும், அந்த நிலையிலேயே இருக்கின்ற யோகமும், அதனால் தான் நினைப்பதும் சொல்வதும் அப்படியே நிகழ்கின்ற சக்தியும், மந்திரம் போன்ற சொற்களும், செய்கின்ற அனைத்துச் செயல்களும் சாதகமாக அமைவதும், முக்காலமும் அறிந்த ஞானமும், உண்மையான சரணாகதியாகிய பக்தியும் ஆகிய இவை அனைத்தையும், தலைவனாக வந்து குருநாதராக வழிகாட்டிய இறைவனின் திருவருளால் அடியவர்கள் கற்றுக்கொள்ளலாம்.

வரி வாரியாக

  • வரி 1

    மாபெரும் சித்திகளாகிய அட்டமா சித்திகளோடு உறுதியான சிவப் பரம்பொருளாகவே அடியவரையும் ஆக்குவதற்கு இறைவன் அருளுகின்றான்.

  • வரி 2

    அதற்காகப் பல விதமான சோதனைகளைச் செய்து பெற்ற பக்குவமும், எண்ணங்களிலிருந்து விடுதலை அடைந்து மோன நிலையில் நிற்கின்ற தூய்மையான மனமும், அந்த நிலையிலேயே இருக்கின்ற யோகமும் அடியவருக்கு அமைகின்றன.

  • வரி 3

    அதனால் தான் நினைப்பதும் சொல்வதும் அப்படியே நிகழ்கின்ற சக்தியும், மந்திரம் போன்ற சொற்களும், செய்கின்ற அனைத்துச் செயல்களும் சாதகமாக அமைவதும், முக்காலமும் அறிந்த ஞானமும் கிடைக்கின்றன.

  • வரி 4

    உண்மையான சரணாகதியாகிய பக்தியும் ஆகிய இவை அனைத்தையும், தலைவனாக வந்து குருநாதராக வழிகாட்டிய இறைவனின் திருவருளால் அடியவர்கள் கற்றுக்கொள்ளலாம்.

திருமந்திரம் பாடல் #1575

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout