திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1577

ஆறாம் தந்திரம்1. சிவகுரு தரிசனம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தேவனுஞ் சித்த குருவு முபாயத்துள்யாவையின் மூன்றா யினகண் டுரையவேமூவா பசுபாச மாற்றிய முத்திப்பாலாவையு நல்குங் குருபரனன் புற்றே.

உரை

அடியவர்கள் செய்கின்ற அனைத்துச் செயல்களுக்கும் இயக்கமாக இருக்கின்ற தேவனாகவும், அடியவரின் சித்தத்தைத் தெளிவுபடுத்தி இறைவனை அடைவதற்குக் குருவாகவும் அவரே வழிகாட்டி, உள்ளிருந்து, அடியவர்களின் ஆன்மாவானது மூன்றாக இருப்பதை மாயை நீங்கிக் கண்டுகொள்ளும்படி அருளி, அதைப் புரிந்துகொள்ளும்படி உபதேசித்து, மூன்றாக இருக்கின்ற பதி பசு பாசம் எனும் தத்துவத்தில், பசுவாகிய ஆன்மாவையும் பாசமாகிய தளையையும் மாற்றி அமைத்து, ஆன்மாவானது பதியாகிய இறைவனை அடைவதற்கான வழியாகிய முக்தியைக் கொடுப்பதால், ஆன்மாவிற்குள் இவை மூன்றையும் உணர்வதைக் கொடுத்து அருளும் குருவாகப் பரம்பொருளே இருப்பது, அடியவர்களின் மீது அவன் கொண்ட அன்பினால் ஆகும்.

வரி வாரியாக

  • வரி 1

    அடியவர்கள் செய்கின்ற அனைத்துச் செயல்களுக்கும் இயக்கமாக இருக்கின்ற தேவனாகவும், அடியவரின் சித்தத்தைத் தெளிவுபடுத்தி இறைவனை அடைவதற்குக் குருவாகவும் அவரே இருந்து உள்ளிருந்து வழிகாட்டுகின்றான்.

  • வரி 2

    அடியவர்களின் ஆன்மாவானது மூன்றாக இருப்பதை மாயை நீங்கிக் கண்டுகொள்ளும்படி அருளி, அதைப் புரிந்துகொள்ளும்படி உபதேசிக்கின்றான்.

  • வரி 3

    மூன்றாக இருக்கின்ற பதி பசு பாசம் எனும் தத்துவத்தில், பசுவாகிய ஆன்மாவையும் பாசமாகிய தளையையும் மாற்றி அமைத்து, ஆன்மாவானது பதியாகிய இறைவனை அடைவதற்கான வழியாகிய முக்தியைக் கொடுக்கின்றான்.

  • வரி 4

    ஆன்மாவிற்குள் இவை மூன்றையும் உணர்வதைக் கொடுத்து அருளும் குருவாகப் பரம்பொருளே இருப்பது, அடியவர்களின் மீது அவன் கொண்ட அன்பினால் ஆகும்.

திருமந்திரம் பாடல் #1577

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout