திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1581

ஆறாம் தந்திரம்1. சிவகுரு தரிசனம்

தொடர்ந்து படிக்கread this section continuously

குருவே சிவமென்னக் கூறின னந்திகுருவே சிவமென்பது குறித் தோரார்குருவே சிவமாகக் கோனுமாய் நிற்குங்குருவே யுரையுணர் வற்றதோர் கோவே.

உரை

தமக்குக் குருவாக அமைந்தவரே சிவப் பரம்பொருள் என்று கூறியருளினார் குருநாதராகிய இறைவன். ஆயினும், குருவாக இருப்பது சிவப் பரம்பொருளே என்பதைத் தமக்குள் சிந்தித்து ஆராய்ந்து அறிந்துகொள்ளாமல் பலர் இருக்கின்றார்கள். அவ்வாறு ஆராய்ந்து அறிந்துகொண்டால், தமது குருவே அன்பையும் அருளையும் கொடுக்கும் சிவப் பரம்பொருளாகவும், வழிகாட்டியும் தவறு செய்தால் தண்டிக்கும் தலைவனாகவும் நிற்கின்றதை அறிந்துகொள்ளலாம். அவ்வாறு அறிந்துகொண்டவர்களுக்குத் தமது குரு என்பவர், சொற்களால் விவரிக்க முடியாதவராகவும், ஐம்புல உணர்வினால் முழுமையாக உணர முடியாதவராகவும் இருக்கின்ற ஒரு இறைவனாக இருப்பார்.

வரி வாரியாக

  • வரி 1

    தமக்குக் குருவாக அமைந்தவரே சிவப் பரம்பொருள் என்று கூறியருளினார் குருநாதராகிய இறைவன்.

  • வரி 2

    ஆயினும், குருவாக இருப்பது சிவப் பரம்பொருளே என்பதைத் தமக்குள் சிந்தித்து ஆராய்ந்து அறிந்துகொள்ளாமல் பலர் இருக்கின்றார்கள்.

  • வரி 3

    அவ்வாறு ஆராய்ந்து அறிந்துகொண்டால், தமது குருவே அன்பையும் அருளையும் கொடுக்கும் சிவப் பரம்பொருளாகவும், வழிகாட்டியும் தவறு செய்தால் தண்டிக்கும் தலைவனாகவும் நிற்கின்றதை அறிந்துகொள்ளலாம்.

  • வரி 4

    அவ்வாறு அறிந்துகொண்டவர்களுக்குத் தமது குரு என்பவர், சொற்களால் விவரிக்க முடியாதவராகவும், ஐம்புல உணர்வினால் முழுமையாக உணர முடியாதவராகவும் இருக்கின்ற ஒரு இறைவனாக இருப்பார்.

திருமந்திரம் பாடல் #1581

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout