தொடர்ந்து படிக்கread this section continuously
சிவனே சிவஞானி யாதலாற் சுத்தசிவனே யெனவடி சேரவல் லார்க்குநவமான தத்துவ நன்முத்தி நண்ணும்பவமான தின்றிப் பரலோக மாமே.
உரைmeaning
சிவப் பரம்பொருளே சிவத்தை அறிந்த ஞானியாகவும் இருப்பதால், சிவத்தை அறிந்த உண்மை ஞானியாகிய குருவையே சிவப் பரம்பொருள் என்று கொண்டு, குருவின் திருவடியைச் சரணடைய முடிந்தவர்களுக்கு, அவர்களுக்குள் தோன்றுகின்ற புதுமையான அற்புதமான ஞானத்தின் மூலம் நன்மையைத் தரும் முக்தி வந்து சேரும். இந்த உலக வாழ்க்கை என்பது இனி எப்போதும் இல்லாத நிலையில், இறைவன் இருக்கின்ற உலகத்தை அவர்கள் அடைவார்கள்.
Because the supreme being Sivam is himself the wise one who has known Sivam, those who take the true wise one who has known Sivam, the guru, to be the supreme being Sivam itself, and who are able to take refuge at the guru's sacred feet, come by the liberation that gives good, through the new and wondrous wisdom that rises within them. With this worldly life now gone for ever, they reach the world where God is.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
சிவப் பரம்பொருளே சிவத்தை அறிந்த ஞானியாகவும் இருக்கின்றான்.
The supreme being Sivam is himself the wise one who has known Sivam.
- வரி 2Line 2
ஆதலால், சிவத்தை அறிந்த உண்மை ஞானியாகிய குருவையே சிவப் பரம்பொருள் என்று கொண்டு, குருவின் திருவடியைச் சரணடைய முடிந்தவர்கள் உண்டு.
So there are those who take the true wise one who has known Sivam, the guru, to be the supreme being Sivam itself, and who are able to take refuge at the guru's sacred feet.
- வரி 3Line 3
அவர்களுக்கு, அவர்களுக்குள் தோன்றுகின்ற புதுமையான அற்புதமான ஞானத்தின் மூலம் நன்மையைத் தரும் முக்தி வந்து சேரும்.
To them comes the liberation that gives good, through the new and wondrous wisdom that rises within them.
- வரி 4Line 4
இந்த உலக வாழ்க்கை என்பது இனி எப்போதும் இல்லாத நிலையில், இறைவன் இருக்கின்ற உலகத்தை அவர்கள் அடைவார்கள்.
With this worldly life now gone for ever, they reach the world where God is.
திருமந்திரம் பாடல் #1580
1 / 2





