திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1579

ஆறாம் தந்திரம்1. சிவகுரு தரிசனம்

தொடர்ந்து படிக்கread this section continuously

உண்மையிற் பொய்மை ஒழித்தலும் உண்மைப்பார்திண்மையும் ஒண்மைச் சிவமாய அவ்வரன்வண்மையும் எட்டெட்டுச் சித்தி மயக்கமும்அண்ணல் அருளன்றி யாரறி வாரே.

உரை

அடியவர்கள் உலகத்தில் பார்க்கின்ற அனைத்தும் உண்மை என்று நினைக்கின்ற மாயையை நீக்கிப் பொய்யான உலக அறிவை அழிப்பதையும், பரம்பொருளாகிய உண்மையின் மேல் மன உறுதியுடன் சிவத்தோடு ஒன்றி இருக்க வைப்பதையும், தீமையை நெருங்க விடாமல் தடுக்கும் நல்ல பாதுகாப்பாக வலிமையுடன் நிற்பதையும் ஆகிய இவை அனைத்தையும், உலக அறிவாகிய அறுபத்து நான்கு கலைகளால் சித்தம் மயங்கி வந்தவர்களால் அறிந்துகொள்ள முடியுமா? தலைவனாகிய இறைவனின் திருவருள் இல்லாமல் இவற்றை யாரால் அறிந்துகொள்ள முடியும்? ஆகவே, சிவகுருவாக வந்த இறைவனின் திருவருளாலேயே அனைத்தையும் அடியவர்களால் அறிந்துகொள்ள முடியும்.

வரி வாரியாக

  • வரி 1

    அடியவர்கள் உலகத்தில் பார்க்கின்ற அனைத்தும் உண்மை என்று நினைக்கின்ற மாயையை நீக்கிப் பொய்யான உலக அறிவை அழிப்பதையும்,

  • வரி 2

    பரம்பொருளாகிய உண்மையின் மேல் மன உறுதியுடன் சிவத்தோடு ஒன்றி இருக்க வைப்பதையும், தீமையை நெருங்க விடாமல் தடுக்கும் நல்ல பாதுகாப்பாக வலிமையுடன் நிற்பதையும்,

  • வரி 3

    ஆகிய இவை அனைத்தையும், உலக அறிவாகிய அறுபத்து நான்கு கலைகளால் சித்தம் மயங்கி வந்தவர்களால் அறிந்துகொள்ள முடியுமா?

  • வரி 4

    தலைவனாகிய இறைவனின் திருவருள் இல்லாமல் இவற்றை யாரால் அறிந்துகொள்ள முடியும்? சிவகுருவாக வந்த இறைவனின் திருவருளாலேயே அடியவர்களால் அறிந்துகொள்ள முடியும்.

திருமந்திரம் பாடல் #1579

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout