திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1582

ஆறாம் தந்திரம்1. சிவகுரு தரிசனம்

தொடர்ந்து படிக்கread this section continuously

சித்த மியாவையுஞ் சிந்தித் திருந்தாருமத்த னுணர்த்து வதாகு மருளாலேசித்த மியாவையுந் திண்சிவ மாண்டக்காலத்தனு மவ்விடத் தேயமர்ந் தானே.

உரை

தங்களின் எண்ணத்தில் முழுவதும் இறைவனையே வைத்து அவனையே சிந்தித்திருக்கின்ற அடியவர்களுக்கு, இறைவனே தந்தையாக வந்து அனைத்தையும் வழிகாட்டி உணர வைப்பது எதனால் என்றால், அவனது திருவருளாலே ஆகும். அப்போது, அடியவரின் எண்ணங்கள் முழுமையையும் உறுதியாகப் பற்றிக்கொண்டு சிவப் பரம்பொருளே ஆட்கொள்ளும் காலத்தில், தந்தையாக இருந்து வழிகாட்டுகின்ற இறைவனும், அடியவரின் எண்ணங்கள் இருக்கின்ற சித்தத்திலேயே குருவாக வந்து வீற்றிருப்பான்.

வரி வாரியாக

  • வரி 1

    தங்களின் எண்ணத்தில் முழுவதும் இறைவனையே வைத்து அவனையே சிந்தித்திருக்கின்ற அடியவர்கள் உண்டு.

  • வரி 2

    அவர்களுக்கு இறைவனே தந்தையாக வந்து அனைத்தையும் வழிகாட்டி உணர வைப்பது எதனால் என்றால், அவனது திருவருளாலே ஆகும்.

  • வரி 3

    அப்போது, அடியவரின் எண்ணங்கள் முழுமையையும் உறுதியாகப் பற்றிக்கொண்டு சிவப் பரம்பொருளே ஆட்கொள்ளும் காலம் வருகின்றது.

  • வரி 4

    அப்போது, தந்தையாக இருந்து வழிகாட்டுகின்ற இறைவனும், அடியவரின் எண்ணங்கள் இருக்கின்ற சித்தத்திலேயே குருவாக வந்து வீற்றிருப்பான்.

திருமந்திரம் பாடல் #1582

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout