திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1583

ஆறாம் தந்திரம்1. சிவகுரு தரிசனம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தானந்தி நீர்மையுட் சந்தித்த சீர்வைத்தகோனந்தி யெந்தை குறிப்பறி வாரில்லைவானந்தி யென்றும் கீழுமொரு வர்க்குத்தானந்தி யங்கித் தனிச்சுட ராமே.

உரை

தாமே குருவாக இருக்கின்ற இறைவனின் மழை போன்ற அளவில்லாத தன்மையிலிருந்து, அடியவர் தமது பாத்திரம் போன்ற பக்குவத்திற்கு ஏற்ற தன்மைகளை அடையும் பொருட்டு, தமக்குள் சந்தித்த இறைவன் தனது அருளால் சிறப்பாக வைத்து அருளிய ஞானத்தின் மூலம், வழிகாட்டியும் தவறு செய்தால் தண்டிக்கும் தலைவனாகவும் குருவாகவும் இருக்கின்ற இறைவனே எமது தந்தை எனும் உண்மையை அறிந்துகொள்ளுகின்றவர்கள் யாரும் இல்லை. அவ்வாறு அறிந்துகொண்டவர்களுக்கு, வானத்திலிருந்து பொழியும் மழை போலக் குருவாக வீற்றிருந்து அனைவருக்கும் அருளுகின்ற இறைவனே என்றும் இந்த உலகத்திலும் இருக்கின்றான். இறைவனது உண்மை ஞானத்தை உணர்ந்த ஞானியாகிய ஒருவரின் பக்குவத்திற்கு ஏற்ற பாத்திரமாகி, தாமே குருவாக இருக்கின்ற இறைவனின் நிலையில் நின்று, அவர் அனைவருக்கும் நன்மை தரும் நெருப்பாகவும், தனக்குச் சரிசமமாக வேறு எதுவும் இல்லாத தனிப்பெரும் சுடர் ஒளியாகவும் இருக்கின்றார்.

வரி வாரியாக

  • வரி 1

    தாமே குருவாக இருக்கின்ற இறைவனின் மழை போன்ற அளவில்லாத தன்மையிலிருந்து, அடியவர் தமது பாத்திரம் போன்ற பக்குவத்திற்கு ஏற்ற தன்மைகளை அடையும் பொருட்டு, தமக்குள் சந்தித்த இறைவன் தனது அருளால் சிறப்பாக ஞானத்தை வைத்து அருளுகின்றான்.

  • வரி 2

    அந்த ஞானத்தின் மூலம், வழிகாட்டியும் தவறு செய்தால் தண்டிக்கும் தலைவனாகவும் குருவாகவும் இருக்கின்ற இறைவனே எமது தந்தை எனும் உண்மையை அறிந்துகொள்ளுகின்றவர்கள் யாரும் இல்லை.

  • வரி 3

    அவ்வாறு அறிந்துகொண்டவர்களுக்கு, வானத்திலிருந்து பொழியும் மழை போலக் குருவாக வீற்றிருந்து அனைவருக்கும் அருளுகின்ற இறைவனே என்றும் இந்த உலகத்திலும் இருக்கின்றான்.

  • வரி 4

    இறைவனது உண்மை ஞானத்தை உணர்ந்த ஞானியாகிய ஒருவரின் பக்குவத்திற்கு ஏற்ற பாத்திரமாகி, தாமே குருவாக இருக்கின்ற இறைவனின் நிலையில் நின்று, அவர் அனைவருக்கும் நன்மை தரும் நெருப்பாகவும், தனக்குச் சரிசமமாக வேறு எதுவும் இல்லாத தனிப்பெரும் சுடர் ஒளியாகவும் இருக்கின்றார்.

திருமந்திரம் பாடல் #1583

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout