திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1573

ஆறாம் தந்திரம்1. சிவகுரு தரிசனம்

தொடர்ந்து படிக்கread this section continuously

பத்திப் பணிந்து பரவும்படி நல்கிச்சுத்த வுரையாற் றுரிசறச் சோதித்துச்சத்து மசத்துஞ் சதசத்துங் காட்டலாற்சித்த மிறையே சிவகுரு வாமே.

உரை

பக்தி செய்து இறைவனை வணங்கிப் பணிகின்ற அடியவரின் புகழை மற்றவர்களும் தெரிந்துகொள்ளும்படி அருளி, தூய்மையான பக்தியால் சொல்வது அனைத்தும் அப்படியே நிகழும் சத்திய வாக்கையும் கொடுத்து அருளி, ஒரு குற்றமும் இல்லாமல் போகும்படி பல விதமான சோதனைகளால் சோதித்து, நிலையானதாகிய சிவமும், நிலையில்லாததாகிய உடலும், நிலையில்லாத அந்த உடலுக்குள் நிலையாக நிற்கின்ற ஆன்மாவும் தாமே என்பதைக் காட்டி அருளியதால், அடியவர்களின் சித்தத்திற்குள் நிலைத்திருக்கும் இறை சக்தியே அருளைக் கொடுக்கின்ற சிவகுருவாக வந்து இருக்கின்றான்.

வரி வாரியாக

  • வரி 1

    பக்தி செய்து இறைவனை வணங்கிப் பணிகின்ற அடியவரின் புகழை மற்றவர்களும் தெரிந்துகொள்ளும்படி இறைவன் அருளுகின்றான்.

  • வரி 2

    தூய்மையான பக்தியால் சொல்வது அனைத்தும் அப்படியே நிகழும் சத்திய வாக்கையும் கொடுத்து அருளி, ஒரு குற்றமும் இல்லாமல் போகும்படி பல விதமான சோதனைகளால் சோதிக்கின்றான்.

  • வரி 3

    நிலையானதாகிய சிவமும், நிலையில்லாததாகிய உடலும், நிலையில்லாத அந்த உடலுக்குள் நிலையாக நிற்கின்ற ஆன்மாவும் தாமே என்பதைக் காட்டி அருளுகின்றான்.

  • வரி 4

    ஆதலால், அடியவர்களின் சித்தத்திற்குள் நிலைத்திருக்கும் இறை சக்தியே அருளைக் கொடுக்கின்ற சிவகுருவாக வந்து இருக்கின்றான்.

திருமந்திரம் பாடல் #1573

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout