தொடர்ந்து படிக்கread this section continuously
அறிய வொண்ணாத வுடம்பின் பயனையறிய வொண்ணாத வறுவகை யாக்கியறிய வொண்ணாத வறுவகைக் கோசத்தறிய வொண்ணாத தோரண்டம் பதித்தே.
உரைmeaning
அறிந்துகொள்ள முடியாத உடம்பின் உண்மையான பயனாகிய அக வழிபாட்டின் மூலம் இறைவனை அடைவதை உணர்ந்து, இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழிமுறைகளில் தங்களின் பக்குவத்திற்கு ஏற்ற ஒரு வழிமுறையைத் தேர்ந்தெடுத்து, அதில் முழுமை பெற்று, அந்த முறையின் மூலம் கிடைக்கின்ற, தம்மை முழுவதும் மூடியிருக்கும் பாதுகாப்பு அரணாக இருக்கின்ற உறையைப் பெற்று, அறிந்துகொள்ள முடியாத ஒரு அண்டத்தையே தமது உடம்பிற்குள் பதித்துக் காணுவதே இறைவனை அடைவதற்கான வழிமுறையாகும்.
Realizing that God is reached through inward worship, which is the true purpose of the body that cannot be known; choosing, from among the six kinds of ways of reaching God that also cannot be known, the one way suited to one's own ripeness and coming to completeness in it; gaining thereby the sheath that covers one wholly and stands as a protecting rampart; and then setting within one's own body, and seeing there, a whole cosmos that cannot be known: this itself is the way of reaching God.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
அறிந்துகொள்ள முடியாத உடம்பின் உண்மையான பயன், அக வழிபாட்டின் மூலம் இறைவனை அடைவதே என்பதை முதலில் உணர்ந்துகொள்கின்றார்கள்.
The true purpose of the body, which cannot be known, is the reaching of God through inward worship, and this is first realized.
- வரி 2Line 2
பிறகு, அறிந்துகொள்ள முடியாத, இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழிமுறைகளில் தமது பக்குவத்திற்கு ஏற்ற ஒரு வழிமுறையைத் தேர்ந்தெடுத்து, அதில் முழுமை பெறுகின்றார்கள்.
Then, from among the six kinds of ways of reaching God, which also cannot be known, the one way suited to one's own ripeness is chosen and brought to completeness.
- வரி 3Line 3
அவ்வாறு கடைபிடித்த வழியின் மூலம், அறிந்துகொள்ள முடியாததும், தம்மை முழுவதும் மூடியிருக்கும் பாதுகாப்பு அரணாக இருப்பதுமான உறை கிடைக்கின்றது.
By the way so followed there is gained the sheath, itself not to be known, that covers one wholly and stands as a protecting rampart.
- வரி 4Line 4
அதன்பிறகு, அறிந்துகொள்ள முடியாத ஒரு அண்டத்தையே தமது உடம்பிற்குள் பதித்துக் காணுவதே இறைவனை அடைவதற்கான வழிமுறையாகும்.
And then setting within one's own body, and seeing there, a whole cosmos that cannot be known: this itself is the way of reaching God.
திருமந்திரம் பாடல் #1572





