திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1571

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆய்ந்தறி வார்கள மரர்வித் தியாதரராய்ந்தறி யாவண்ணம் நின்ற வரனெறியாய்ந்தறிந் தேனவன் சேவடி கைதொழவாய்ந்தறிந் தேன்மன மயம்மைகண் டேனே.

உரை

இறைவனை ஆராய்ந்து அறிந்தவர்களே அமரர்களாகவும், உண்மை ஞானமும் உலக ஞானமும் பெற்ற வித்தியாதரர்களாகவும் இருக்கின்றார்கள். ஆனாலும், ஆராய்ந்து அறிந்துகொள்ள முடியாத தன்மையை உடையவனாக நின்று அனைத்தையும் காக்கின்ற இறைவனை அடைகின்ற வழிமுறை, அன்பினால் உணர்கின்ற வழிமுறையாகும். அப்படிப்பட்ட இறைவனை யானும் அன்பினால் ஆராய்ந்து அறிந்துகொண்டு, அவனின் திருவடிகளை எமது இரண்டு கைகளையும் கூப்பித் தொழுது வணங்கி, எமக்குள்ளேயே ஆராய்ந்து அறிந்துகொண்டோம். அது எப்படி என்றால், அன்பின் வடிவமாகிய இறைவனின் சக்தியே எமக்குள் இருக்கின்ற மனமாகவும், அதன் தன்மைகளாகவும், எமக்குள் இயங்குகின்ற அனைத்துமாகவும் இருந்து எமக்குக் காண்பித்ததை யாம் கண்டுகொண்டோம்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனை ஆராய்ந்து அறிந்தவர்களே அமரர்களாகவும், உண்மை ஞானமும் உலக ஞானமும் பெற்ற வித்தியாதரர்களாகவும் இருக்கின்றார்கள்.

  • வரி 2

    ஆனாலும், ஆராய்ந்து அறிந்துகொள்ள முடியாத தன்மையை உடையவனாக நின்று அனைத்தையும் காக்கின்ற இறைவனை அடைகின்ற வழிமுறை, அன்பினால் உணர்கின்ற வழிமுறையாகும்.

  • வரி 3

    அப்படிப்பட்ட இறைவனை யானும் அன்பினால் ஆராய்ந்து அறிந்துகொண்டு, அவனின் செம்மையான திருவடிகளை எமது இரண்டு கைகளையும் கூப்பித் தொழுது வணங்கினேன்.

  • வரி 4

    எமக்குள்ளேயே ஆராய்ந்து அறிந்துகொண்டோம்; அன்பின் வடிவமாகிய இறைவனின் சக்தியே எமக்குள் இருக்கின்ற மனமாகவும், அதன் தன்மைகளாகவும், எமக்குள் இயங்குகின்ற அனைத்துமாகவும் இருந்து எமக்குக் காண்பித்ததை யாம் கண்டுகொண்டோம்.

திருமந்திரம் பாடல் #1571

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout