திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1558

தொடர்ந்து படிக்கread this section continuously

ஒன்றது பேரூர் வழியா றதற்குளவென்றது போல விருமுச் சமையமுநன்றிது தீதிது யென்றுரை யாளர்கள்குன்று குரைத்தெழு நாயையொத் தாரே.

உரை

ஒன்றாக இருக்கின்ற மிகப் பெரும் ஊருக்குச் செல்லுவதற்கு ஆறு விதமான வழிகள் இருக்கின்றன. அது போலவே, ஆறு விதமான சமயங்களும் ஒரே பரம்பொருளாகிய இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழிமுறைகளையே சொல்லுகின்றன. ஆனால் இதை முழுவதுமாக உணர்ந்துகொள்ளாமல், நன்மையானது இந்தச் சமயம் தீமையானது இந்தச் சமயம் என்று பிரித்துப் பிரித்து வேறுபாடுள்ள கருத்துக்களை உரைத்து, தாம் கூறுவதே உண்மை என்று மற்றவர்களை நம்ப வைக்கப் பிரச்சாரம் செய்கின்றவர்கள், மலையைப் பார்த்துக் குரைத்துக் குதிக்கின்ற நாயைப் போலவே இருக்கின்றார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    முக்தி எனும், ஒன்றாக இருக்கின்ற மிகப் பெரும் ஊருக்குச் செல்லுவதற்கு ஆறு விதமான வழிகள் இருக்கின்றன.

  • வரி 2

    அது போலவே, இரு மூன்று என்கின்ற ஆறு விதமான சமயங்களும் ஒரே பரம்பொருளாகிய இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழிமுறைகளையே சொல்லுகின்றன; ஆனால் இது முழுவதுமாக உணரப்படுவதில்லை.

  • வரி 3

    நன்மையானது இந்தச் சமயம் தீமையானது இந்தச் சமயம் என்று பிரித்துப் பிரித்து வேறுபாடுள்ள கருத்துக்களை உரைத்து, தாம் கூறுவதே உண்மை என்று மற்றவர்களை நம்ப வைக்கப் பிரச்சாரம் செய்கின்றவர்கள்,

  • வரி 4

    மலையைப் பார்த்துக் குரைத்துக் குதிக்கின்ற நாயைப் போலவே இருக்கின்றார்கள்.

திருமந்திரம் பாடல் #1558

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout