தொடர்ந்து படிக்கread this section continuously
சைவப் பெருமைத் தனிநாயகன் றன்னையுய்ய வுயிர்க்கின்ற வொண்சுடர் நந்தியைமெய்யப் பெருமையர்க் கன்பனை யின்பஞ்செய்வையத் தலைவனை வந்தடைந்துய் மினே.
உரைmeaning
சைவம் என்று அறியப்படுகின்ற, இறைவனை அடைவதற்கான நெறிமுறைக்கு மிகப்பெரும் பெருமையாக இருக்கின்றவனும், தனக்குச் சரிசமமாக வேறு யாரும் இல்லாத தலைவனாக இருக்கின்றவனும், உயிர்கள் அனைத்தும் தம்மை அடைவதற்காக அவற்றுக்குள் உணர்வாகக் கலந்து நின்று இயக்குகின்றவனும், அதற்கான ஞானத்தைத் தரும் ஜோதியாக இருந்து மாயையாகிய இருளை அகற்றுகின்ற குருநாதனாக இருக்கின்றவனும், தம்மை உண்மையாக அறிந்துகொண்ட பெருமை மிக்க அடியவர்களிடம் அன்பு செய்கின்ற அடியவனாக இருந்து பேரின்பத்தைக் கொடுக்கின்றவனும், உலகங்கள் அனைத்திற்கும் தலைவனாக இருக்கின்றவனும் ஆகிய இறைவனை, வந்து தமக்குள்ளேயே தேடி அடைந்து, அவனை உண்மையாக உணர்ந்து மேன்மை பெறுமாறு இப்பாடல் உலகத்தவரை அழைக்கிறது.
This verse calls upon the people of the world to come and seek within themselves, and so reach, that God who is the very great glory of the discipline known as Saivam, by which God is reached; who is the master beside whom there is no other equal to him; who mingles as awareness within all living beings and moves them, so that they may reach him; who is the Guru, standing as the bright flame that gives the wisdom for that and driving away the darkness that is maya; who becomes a servant to the glorious devotees who have truly known him, loving them and giving them supreme bliss; and who is master of all the worlds; and, having so reached him, to truly realize him and gain nobility.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
சைவம் என்று அறியப்படுகின்ற, இறைவனை அடைவதற்கான நெறிமுறைக்கு மிகப்பெரும் பெருமையாக இருக்கின்றவனும், தனக்குச் சரிசமமாக வேறு யாரும் இல்லாத தலைவனாக இருக்கின்றவனும் இறைவனே.
God is the very great glory of the discipline known as Saivam, by which God is reached, and the master beside whom there is no other equal to him.
- வரி 2Line 2
உயிர்கள் அனைத்தும் தம்மை அடைவதற்காக அவற்றுக்குள் உணர்வாகக் கலந்து நின்று இயக்குகின்றவனும், அதற்கான ஞானத்தைத் தரும் ஜோதியாக இருந்து மாயையாகிய இருளை அகற்றுகின்ற குருநாதனாக இருக்கின்றவனும் அவனே.
He mingles as awareness within all living beings and moves them so that they may reach him, and he is the Guru, standing as the bright flame that gives the wisdom for that and driving away the darkness that is maya.
- வரி 3Line 3
தம்மை உண்மையாக அறிந்துகொண்ட பெருமை மிக்க அடியவர்களிடம் அன்பு செய்கின்ற அடியவனாக இருந்து பேரின்பத்தைக் கொடுக்கின்றவனும் அவனே.
He becomes a servant to the glorious devotees who have truly known him, loving them and giving them supreme bliss.
- வரி 4Line 4
உலகங்கள் அனைத்திற்கும் தலைவனாக இருக்கின்ற அந்த இறைவனை வந்து தமக்குள்ளேயே தேடி அடைந்து, அவனை உண்மையாக உணர்ந்து மேன்மை பெறுமாறு இப்பாடல் உலகத்தவரை அழைக்கிறது.
This verse calls upon the people of the world to come and seek within themselves, and so reach, that God who is master of all the worlds, and by truly realizing him to gain nobility.
திருமந்திரம் பாடல் #1559





