தொடர்ந்து படிக்கread this section continuously
சிவனவன் வைத்ததோர் தெய்வ நெறியிற்பவனவன் வைத்த பழவழி நாடியிவனவ னென்ப தறியவல் லார்கட்கவனவ னங்குள னாங்கட னாமே.
உரைmeaning
சிவப் பரம்பொருளாக இருக்கின்ற இறைவன் வைத்து அருளிய, தெய்வத்தை அடைவதற்கான ஒரு நெறிமுறையைக் கடைபிடித்து, அந்தச் சிவப் பரம்பொருளே வைத்து அருளிய பழமையான வழியைத் தமக்குள்ளே தேடி அடைந்து, அதன் மூலம் தமது ஆன்மாவாக இருப்பதும் அவனே என்பதை அறிந்துகொள்ள முடிந்தவர்களுக்கு, அதாவது தாம் பார்க்கின்ற அனைத்திலும் அவனைக் காண்பவர்களுக்கு, அவர்கள் பார்க்கின்ற அனைத்திலும் அதனதன் தன்மையிலேயே வந்து இருக்க வேண்டியது அந்த இறைவனின் கடமை ஆகும்.
There are those who follow a discipline for reaching the divine which God, the supreme being Sivam, himself set and graced; who seek within themselves and reach the ancient way which that same supreme being set and graced; and who are thereby able to know that what stands as their own soul is he himself, seeing him in everything they look upon. For them it is God's own duty to come and be present, in each thing according to its own nature, in everything they look upon.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
சிவப் பரம்பொருளாக இருக்கின்ற இறைவன் வைத்து அருளிய, தெய்வத்தை அடைவதற்கான ஒரு நெறிமுறையைக் கடைபிடித்து,
Following a discipline for reaching the divine which God, the supreme being Sivam, himself set and graced,
- வரி 2Line 2
அந்தச் சிவப் பரம்பொருளே வைத்து அருளிய பழமையான வழியைத் தமக்குள்ளே தேடி அடைந்து,
and seeking within themselves and reaching the ancient way which that same supreme being set and graced,
- வரி 3Line 3
அதன் மூலம் தமது ஆன்மாவாக இருப்பதும் அவனே என்பதை அறிந்துகொள்ள முடிந்தவர்களும், தாம் பார்க்கின்ற அனைத்திலும் அவனைக் காண்பவர்களும் இருக்கின்றார்கள்.
there are those who are thereby able to know that what stands as their own soul is he himself, and who see him in everything they look upon.
- வரி 4Line 4
அவர்கள் பார்க்கின்ற அனைத்திலும் அதனதன் தன்மையிலேயே வந்து இருக்க வேண்டியது அந்த இறைவனின் கடமை ஆகும்.
For them it is God's own duty to come and be present, in each thing according to its own nature, in everything they look upon.
திருமந்திரம் பாடல் #1560





