திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1561

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆமா றுரைக்கு மறுசமை யாதிக்குப்போமாறு தானில்லைப் புண்ணிய மல்லதங்காமார் வழியாக்கு மவ்வே றுயிர்கட்கும்போமா றவ்வாதார பூங்கொடி யாளே.

உரை

அவரவர்களின் நிலைக்கு ஏற்றபடியே இறைவனை அடைவதற்கான வழியை எடுத்துக் கூறுகின்ற ஆறு விதமான சமயங்களுக்கும், ஆதிப் பரம்பொருளாகிய இறைவனிடம் போய்ச் சேருகின்ற வழி புண்ணியத்தைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆகவே, புண்ணியத்தினால் இறைவனை அடைகின்ற வழியை உருவாக்கிக் கொடுத்து, அதனால் பல வகையான உயிர்களுக்கும் இறைவனிடம் போய்ச் சேருகின்ற வழியாக, அவர்களுக்குள் இருக்கின்ற ஆதாரச் சக்கரங்களின் பூவிதழ்களை இணைக்கின்ற கொடியாக இருந்து, அவற்றிற்கும் மேலான சக்கரத்தில் இருக்கின்ற இறைவனிடம் இணைத்து வைப்பவள் இறைவியே ஆகும்.

வரி வாரியாக

  • வரி 1

    அவரவர்களின் நிலைக்கு ஏற்றபடியே இறைவனை அடைவதற்கான வழியை எடுத்துக் கூறுகின்ற ஆறு விதமான சமயங்களுக்கும், ஆதிப் பரம்பொருளாகிய இறைவனிடம் போய்ச் சேருவதற்கும்,

  • வரி 2

    புண்ணியத்தைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை.

  • வரி 3

    ஆகவே, புண்ணியத்தினால் இறைவனை அடைகின்ற வழியை உருவாக்கிக் கொடுத்து, பல வகையான உயிர்களுக்கும் அதையே வழியாக ஆக்கித் தருபவள்,

  • வரி 4

    அவர்களுக்குள் இருக்கின்ற ஆதாரச் சக்கரங்களின் பூவிதழ்களை இணைக்கின்ற கொடியாக இருந்து, அவற்றிற்கும் மேலான சக்கரத்தில் இருக்கின்ற இறைவனிடம் அவர்களை இணைத்து வைக்கின்ற இறைவியே ஆவாள்.

திருமந்திரம் பாடல் #1561

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout