தொடர்ந்து படிக்கread this section continuously
அரனெறி யாவ தறிந்தேனு நானுஞ்சிவநெறி தேடித் திரிந்த வன்னாளுமுரைநெறி யுள்ளக் கடல் கடந்தேறுந்தரநெறி யாய தனிச்சுடர் தானே.
உரைmeaning
அனைத்தையும் காத்து நிற்கின்ற இறைவனை அடைவதற்கான வழிமுறைகளாக இருப்பவற்றை யானும் அறிந்துகொண்டேன். அந்த இறைவனை அடைவதற்கான வழிமுறைகளைத் தேடி யான் திரிந்துகொண்டிருந்த முன்னொரு நாட்களில், பல விதமான எண்ணங்கள் அலை மோதிக்கொண்டு இருக்கின்ற எமது உள்ளமாகிய பெரும் கடலைக் கடந்து மேல் நிலைக்குச் செல்லுவதற்கு இறைவன் எமக்குத் தந்து அருளிய வழிமுறைகளாக இருந்து வழி காட்டியது, தனக்குச் சரிசமமாக எதுவும் இல்லாத பேரொளிச் சுடராக எமக்குள் இருக்கின்ற இறைவனே என்பதை அறிந்துகொண்டேன்.
I too have come to know what stand as the ways of reaching God, who protects all. In those earlier days when I wandered searching for the ways of reaching that God, what guided me, standing as the very ways God gave and graced to us for crossing the great sea that is our own heart, in which many kinds of thoughts beat like waves, and for rising to the higher state, was God himself, who dwells within us as the great flame of light beside which there is no equal. This I have come to know.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
அனைத்தையும் காத்து நிற்கின்ற இறைவனை அடைவதற்கான வழிமுறைகளாக இருப்பவற்றை யானும் அறிந்துகொண்டேன்.
I too have come to know what stand as the ways of reaching God, who protects all.
- வரி 2Line 2
அந்த இறைவனை அடைவதற்கான வழிமுறைகளைத் தேடி யான் திரிந்துகொண்டிருந்த முன்னொரு நாட்களில்,
In those earlier days when I wandered searching for the ways of reaching that God,
- வரி 3Line 3
பல விதமான எண்ணங்கள் அலை மோதிக்கொண்டு இருக்கின்ற எமது உள்ளமாகிய பெரும் கடலைக் கடந்து மேல் நிலைக்குச் செல்லுவதற்கு இறைவன் எமக்குத் தந்து அருளிய வழிமுறைகள் இருந்தன.
there were the ways God gave and graced to us for crossing the great sea that is our own heart, in which many kinds of thoughts beat like waves, and for rising to the higher state.
- வரி 4Line 4
அந்த வழிமுறைகளாக இருந்து எமக்கு வழி காட்டியது, தனக்குச் சரிசமமாக எதுவும் இல்லாத பேரொளிச் சுடராக எமக்குள் இருக்கின்ற இறைவனே என்பதை அறிந்துகொண்டேன்.
What guided me by standing as those ways was God himself, who dwells within us as the great flame of light beside which there is no equal. This I have come to know.
திருமந்திரம் பாடல் #1562





