திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1563

தொடர்ந்து படிக்கread this section continuously

தேர்ந்தவர் தன்னை யடைந்த சிவநெறிபேர்ந்தவ ருன்னிப் பெயர்ந்த பெருவழியார்ந்தவ ரண்டத்து புக்க வருநெறிபோந்து பிணைந்து புணர்நெறி யாமே.

உரை

இறைவனைத் தமக்குள் உணர்ந்து தெளிவு பெற்றவர்கள் அடைந்த, இறைவனை அடைவதற்கான வழிமுறைகளை, அவர்கள் அடைந்தபடியே வெளிப்புறமாகத் தேடுவதை விட்டுவிட்டு, மனதை ஒருநிலைப்படுத்தித் தமக்குள் இறைவனையே நினைத்துக்கொண்டு, ஆசைகளையும் பற்றுக்களையும் விட்டுவிட்டு அடைகின்ற மிகப் பெரும் வழிமுறைகளை நன்றாக ஆராய்ந்து அறிந்துகொண்டவர்கள், அண்ட சராசரங்களில் உள்ள அனைத்திலும் புகுந்திருக்கின்ற இறையருளை அடைவதற்கான வழிமுறைகள் தமக்குள்ளேயே இருப்பதை உணர்ந்து, அதற்குள் புகுந்து, அதனோடு பின்னிப் பிணைந்து, ஒன்றாகக் கலந்து இறைவனை அடைகின்ற வழிமுறை இதுவே ஆகும்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனைத் தமக்குள் உணர்ந்து தெளிவு பெற்றவர்கள், இறைவனை அடைவதற்கான வழிமுறைகளை அடைந்தார்கள்.

  • வரி 2

    அவர்கள் அடைந்தபடியே வெளிப்புறமாகத் தேடுவதை விட்டுவிட்டு, மனதை ஒருநிலைப்படுத்தித் தமக்குள் இறைவனையே நினைத்துக்கொண்டு, ஆசைகளையும் பற்றுக்களையும் விட்டுவிட்டு அடைகின்ற மிகப் பெரும் வழிமுறைகள் இவையே.

  • வரி 3

    அவற்றை நன்றாக ஆராய்ந்து அறிந்துகொண்டவர்கள், அண்ட சராசரங்களில் உள்ள அனைத்திலும் புகுந்திருக்கின்ற இறையருளை அடைவதற்கான வழிமுறைகள் தமக்குள்ளேயே இருப்பதை உணர்கின்றார்கள்.

  • வரி 4

    அதற்குள் புகுந்து, அதனோடு பின்னிப் பிணைந்து, ஒன்றாகக் கலக்கின்றார்கள்; இறைவனை அடைகின்ற வழிமுறை இதுவே ஆகும்.

திருமந்திரம் பாடல் #1563

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout