திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1565

தொடர்ந்து படிக்கread this section continuously

மினக்குறி யாளனை வேதியர் வேதத்தினக்குறி யாளனை ஆதிப் பிரானைநினைக்குறி யாளனை ஞானக் கொழுந்தின்நயக்குறி காணிலர னெறியா குமே.

உரை

மின்னல் போன்ற ஒளியும் ஒலியும் சேர்ந்த வடிவமாக இருப்பவனை, அந்தணர்கள் ஓதுகின்ற வேதத்தின் உட்பொருள் வடிவமாக இருப்பவனை, ஆதியிலிருந்தே இருக்கின்ற தலைவனை, அடியவர்கள் நினைக்கின்ற வடிவமாகவே வந்திருந்து அருளுபவனை, ஞானத்தின் உச்சியான நிலையில் அன்பின் வடிவமாகவே கண்டு தரிசித்தால், அதுவே அவனை அடைவதற்கான வழிமுறையாக ஆகிவிடும்.

வரி வாரியாக

  • வரி 1

    மின்னல் போன்ற ஒளியும் ஒலியும் சேர்ந்த வடிவமாக இருப்பவனை, அந்தணர்கள் ஓதுகின்ற வேதத்திற்கு உரியவனை,

  • வரி 2

    அந்த வேதத்தின் உட்பொருள் வடிவமாக இருப்பவனை, ஆதியிலிருந்தே இருக்கின்ற தலைவனை,

  • வரி 3

    அடியவர்கள் நினைக்கின்ற வடிவமாகவே வந்திருந்து அருளுபவனை, ஞானத்தின் உச்சியான நிலையில்,

  • வரி 4

    அன்பின் வடிவமாகவே கண்டு தரிசித்தால், அதுவே அவனை அடைவதற்கான வழிமுறையாக ஆகிவிடும்.

திருமந்திரம் பாடல் #1565

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout