திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1566

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆய்ந்துணர் வார்களான சாத்திரம் பலவாய்ந்துணரா வகை நின்ற வரனெறியாய்ந்துணர் வாரரன் சேவடி கைதொழுதேய்ந்துணரச் செய்வ தோரின்பமு மாமே.

உரை

இறைவனை அடையத் தாங்கள் கடைபிடிக்கும் ஒரு வழிமுறையை ஆராய்ந்து உணர்ந்தவர்கள், அதற்கான விதிமுறைகளைப் பல விதமாகக் கூறுகின்றார்கள். ஆனால், இந்த விதிமுறைகளை ஆராய்ந்து உணர முடியாத வகையில்தான் நிற்கின்றது இறைவனை அடைவதற்கான உண்மையான வழிமுறை. அதனைத் தமக்குள் ஆராய்ந்து உணர்ந்துகொண்டவர்கள், இறைவனின் திருவடிகளை இரண்டு கைகளும் கூப்பித் தொழுது வணங்கி, தம்முடைய தூய்மையான அன்பினால் இறைவனை உணர்ந்துகொள்ளுவதே ஒரு பேரின்பம் ஆகும்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனை அடையத் தாங்கள் கடைபிடிக்கும் ஒரு வழிமுறையை ஆராய்ந்து உணர்ந்தவர்கள், அதற்கான விதிமுறைகளைப் பல விதமாகக் கூறுகின்றார்கள்.

  • வரி 2

    ஆனால், அந்த விதிமுறைகளால் ஆராய்ந்து உணர முடியாத வகையில்தான் நிற்கின்றது இறைவனை அடைவதற்கான உண்மையான வழிமுறை.

  • வரி 3

    அதனைத் தமக்குள் ஆராய்ந்து உணர்ந்துகொண்டவர்கள், இறைவனின் செம்மையான திருவடிகளை இரண்டு கைகளும் கூப்பித் தொழுது வணங்குகின்றார்கள்.

  • வரி 4

    அவர்கள் தம்முடைய தூய்மையான அன்பினால் இறைவனை உணர்ந்துகொள்ளுவதே ஒரு பேரின்பம் ஆகும்.

திருமந்திரம் பாடல் #1566

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout