தொடர்ந்து படிக்கread this section continuously
சைவச் சமையத் தனிநாயக னந்தியுய்ய வகுத்த தொருநெறி யொன்றுண்டுதெய்வ வரனெறி சன்மார்கஞ் சேர்ந்ததுவையத் துள்ளவர்க்கு வகுத்துவைத் தானே.
உரைmeaning
சைவ சமயத்திற்குத் தனிப் பெரும் தலைவனாகவும் குருநாதனாகவும் இருக்கின்ற இறைவன், அனைத்து உயிர்களும் முக்தியை அடைவதற்காக வகுத்து அருளிய வழிமுறையில் அன்பு ஒன்று மட்டுமே இருக்கின்றது. அதுவே தெய்வீகமான, இறைவனை அடைவதற்கான வழிமுறையாகும். உண்மை வழிமுறைகள் அனைத்தும் அதனோடு சேர்ந்தே இருக்க, உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அதனதன் தகுதிக்கு ஏற்றவாறு அவற்றைப் பல வழிமுறைகளாகப் பிரித்து வைத்து அருளினான் இறைவன்.
In the way that God, who is the one great master of the Saiva religion and its Guru, apportioned and graced so that all living beings might attain liberation, there is one thing only, and that is love. That itself is the divine way of reaching God. And all the true ways stand joined with that one; God divided them and set them out, graciously, as many ways for all the living beings in the world, each according to its own fitness.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
சைவ சமயத்திற்குத் தனிப் பெரும் தலைவனாகவும் குருநாதனாகவும் இருக்கின்ற இறைவன்,
God, who is the one great master of the Saiva religion and its Guru,
- வரி 2Line 2
அனைத்து உயிர்களும் முக்தியை அடைவதற்காக ஒரு வழிமுறையை வகுத்து அருளினான்; அந்த வழிமுறையில் அன்பு ஒன்று மட்டுமே இருக்கின்றது.
apportioned and graced a way so that all living beings might attain liberation, and in that way there is one thing only, and that is love.
- வரி 3Line 3
அதுவே தெய்வீகமான, இறைவனை அடைவதற்கான வழிமுறையாகும்; உண்மை வழிமுறைகள் அனைத்தும் அதனோடு சேர்ந்தே இருக்கின்றன.
That itself is the divine way of reaching God, and all the true ways stand joined with it.
- வரி 4Line 4
உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அதனதன் தகுதிக்கு ஏற்றவாறு அவற்றைப் பல வழிமுறைகளாகப் பிரித்து வைத்து அருளினான் இறைவன்.
God divided them and set them out, graciously, as many ways for all the living beings in the world, each according to its own fitness.
திருமந்திரம் பாடல் #1567





