தொடர்ந்து படிக்கread this section continuously
இத்தவ மத்தவ மென்றிரு பேரிடும்பித்தரைக் காணில னாமெங்கள் பேர்நந்தியெத்தவ மாகிலெ னெங்கும் பிறக்கிலெனொத்துணர் வார்க்குஒல்லை யூர்புக லாமே.
உரைmeaning
இந்தத் தவம் சிறந்தது, அந்தத் தவம் சிறப்பு இல்லாதது என்று நன்மை தீமை என்று இரண்டு விதமான பெயர்களை வைக்கின்ற பித்தர்களை, எங்களின் பெருமை மிக்க குருநாதனாகிய இறைவன் கண்டுகொள்வது இல்லை. எந்தத் தவத்தைக் கடைபிடித்தால் என்ன? இந்த உலகத்தில் எந்த இடத்தில், எந்த உயிராகப் பிறந்திருந்தால் என்ன? அனைத்து உயிர்களிலும் அன்பின் வடிவமாக இறைவன் ஒருவனே இருக்கின்றான் என்பதை உணருபவர்களுக்கு, உடனடியாக முக்தி எனும் ஊருக்குள் நுழைய முடியும்.
God, our glorious Guru, takes no notice of those out of their senses who put two different names on austerity, calling this austerity excellent and that austerity of no excellence, this one good and that one evil. What does it matter which austerity one follows? What does it matter in which place in this world, or as which living being, one is born? Those who realize that in all living beings there is one God alone, in the form of love, can enter at once into the town that is liberation.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இந்தத் தவம் சிறந்தது, அந்தத் தவம் சிறப்பு இல்லாதது என்று, நன்மை தீமை என்று இரண்டு விதமான பெயர்களை வைக்கின்றவர்கள்,
Those who put two different names on austerity, calling this austerity excellent and that austerity of no excellence, this one good and that one evil,
- வரி 2Line 2
பித்தர்களே; எங்களின் பெருமை மிக்க குருநாதனாகிய இறைவன் அவர்களைக் கண்டுகொள்வது இல்லை.
are people out of their senses, and God, our glorious Guru, takes no notice of them.
- வரி 3Line 3
எந்தத் தவத்தைக் கடைபிடித்தால் என்ன? இந்த உலகத்தில் எந்த இடத்தில், எந்த உயிராகப் பிறந்திருந்தால் என்ன?
What does it matter which austerity one follows? What does it matter in which place in this world, or as which living being, one is born?
- வரி 4Line 4
அனைத்து உயிர்களிலும் அன்பின் வடிவமாக இறைவன் ஒருவனே இருக்கின்றான் என்பதை உணருபவர்களுக்கு, உடனடியாக முக்தி எனும் ஊருக்குள் நுழைய முடியும்.
Those who realize that in all living beings there is one God alone, in the form of love, can enter at once into the town that is liberation.
திருமந்திரம் பாடல் #1568





