தொடர்ந்து படிக்கread this section continuously
ஆமே பிரான்முக மைந்தொடு மாருயிராமே பிரானுக் கதோமுக மானதாமாமே பிரானுக்குந் தன்சிர மாலைக்கும்நாமே பிரானுக்கு நரரியல் பாமே.
உரைmeaning
அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனுக்கு, ஐந்து திருமுகங்களோடு, ஆறாவது முகமான அதோமுகமாக அண்ட சராசரங்களும் அவற்றில் உள்ள அனைத்து உயிர்களுமே இருக்கின்றன. இந்த உலகத்தில் இருக்கின்ற உயிர்களால் அழைக்கப்படுகின்ற பலவாறான பெயர்களே, இறைவன் தனது திருக்கழுத்தில் அணிந்திருக்கின்ற மண்டையோட்டு மாலையாக இருக்கின்றது. இவையெல்லாம், மாயையைத் தமது இயல்பாகக் கொண்ட மனிதர்களால் பாவனை செய்யப்பட்ட உருவகங்களே அல்லாமல், இறைவனுக்கு என்று தனியாக ஒரு பெயரோ உருவமோ தன்மையோ கிடையாது.
For God, who is master of all, along with his five sacred faces, the whole cosmos and all the living beings within it are themselves the sixth face, the downward-facing one. The many and various names by which the living beings of this world call him are themselves the garland of skulls he wears upon his sacred neck. All of these are only figures imagined by human beings, whose own nature is maya; God has no separate name, no separate form and no separate attribute of his own.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஆம்; அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனுக்கு, அவனுடைய ஐந்து திருமுகங்களோடு ஆருயிர்கள் அனைத்தும் இருக்கின்றன.
Yes: for God, the master, along with his five sacred faces, there stand all the precious lives.
- வரி 2Line 2
ஆம்; அந்தத் தலைவனாகிய இறைவனுக்கு, அண்ட சராசரங்களும் அவற்றில் உள்ள அனைத்து உயிர்களுமே ஆறாவது முகமான அதோமுகமாக இருக்கின்றன.
Yes: for God the master, the whole cosmos and all the living beings within it are themselves the sixth face, the downward-facing one.
- வரி 3Line 3
ஆம்; அந்தத் தலைவனாகிய இறைவனுக்கும், அவன் தனது திருக்கழுத்தில் அணிந்திருக்கின்ற மண்டையோட்டு மாலைக்கும்,
Yes: for God the master, and for the garland of skulls upon his sacred neck,
- வரி 4Line 4
இந்த உலகத்தில் இருக்கின்ற உயிர்களால் அழைக்கப்படுகின்ற பலவாறான பெயர்களே அந்த மாலையாக இருக்கின்றன; இவையெல்லாம், மாயையைத் தமது இயல்பாகக் கொண்ட மனிதர்களால் பாவனை செய்யப்பட்ட உருவகங்களே அல்லாமல், இறைவனுக்கு என்று தனியாக ஒரு பெயரோ உருவமோ தன்மையோ கிடையாது.
the many and various names by which the world's living beings call him are themselves that garland; and all of these are only figures imagined by human beings, whose own nature is maya, for God has no separate name, no separate form and no separate attribute of his own.
திருமந்திரம் பாடல் #1569





