திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1538

ஐந்தாம் தந்திரம்21. புறச் சமய நிந்தனை

தொடர்ந்து படிக்கread this section continuously

கத்துங் கழுதைகள் போலுங் கலதிகள்சுத்த சிவனெங்குந் தோய்வுற்று நிற்கின்றான்குத்தந் தெரியார் குணங்கொண்டு கோதாட்டார்பித்தேறி நாளும் பிறந்திறப் பாரே.

உரை

காரணமே தெரியாமல் கத்துகின்ற கழுதைகளைப் போலவே தீய குணம் உள்ளவர்கள் இருக்கின்றார்கள். அதனால், எங்கும் இருக்கின்ற தூய்மையான சிவப் பரம்பொருள், அவர்களால் அறிய முடியாதபடி தன்னை மாயையால் மறைத்துக்கொண்டு நிற்கின்றான். தம்மிடம் இருக்கின்ற தீய குணங்களை அறிந்துகொள்ளாமல், நல்ல குணங்களைக் கடைப்பிடித்துத் தீய குணங்களை நீக்கிக்கொள்ளாதவர்கள், தீய குணத்திலேயே மூழ்கி, அதனால் பித்து அதிகமாகி, தினந்தோறும் வாழ்நாளை வீணடித்து, மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கின்ற பிறவிச் சுழலிலேயே சிக்கிக்கொண்டிருப்பார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    காரணமே தெரியாமல் கத்துகின்ற கழுதைகளைப் போலவே தீய குணம் உள்ளவர்கள் இருக்கின்றார்கள்.

  • வரி 2

    அதனால், எங்கும் இருக்கின்ற தூய்மையான சிவப் பரம்பொருள், அவர்களால் அறிய முடியாதபடி தன்னை மாயையால் மறைத்துக்கொண்டு நிற்கின்றான்.

  • வரி 3

    தம்மிடம் இருக்கின்ற தீய குணங்களை அறிந்துகொள்ளாமல், நல்ல குணங்களைக் கடைப்பிடித்துத் தீய குணங்களை நீக்கிக்கொள்ளாதவர்கள்,

  • வரி 4

    தீய குணத்திலேயே மூழ்கி, அதனால் பித்து அதிகமாகி, தினந்தோறும் வாழ்நாளை வீணடித்து, மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கின்ற பிறவிச் சுழலிலேயே சிக்கிக்கொண்டிருப்பார்கள்.

திருமந்திரம் பாடல் #1538

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout