தொடர்ந்து படிக்கread this section continuously
நூறு சமைய முளவால் நுகருங்காலாறு சமைய மவ்வாறுட் படுவனகூறு சமையங்கள் கொண்ட நெறிநில்லாநீறு பரநெறி யில்லாநெறி நின்றே.
உரைmeaning
இறைவனை அடைவதற்காக என்று சொல்லப்படுகின்ற நூற்றுக்கணக்கான வழிமுறைகள் இருக்கின்றன. ஆதலால், அவற்றில் அவரவர்க்கு ஏற்றதை எடுத்துக்கொண்டு கடைப்பிடிக்கும்போது, இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழிமுறைகளுக்கு உள்ளேயே அந்த நூற்றுக்கணக்கான வழிமுறைகளும் அடங்கிவிடும். இப்படி ஆறு பிரிவுகளாக இருக்கின்ற வழிமுறைகள் அனைத்தும், தாம் எடுத்துக்கொண்ட வழிமுறையிலேயே நின்றுவிடாமல், ஒவ்வொரு வழிமுறையிலும் பக்குவம் பெற்று அடைகின்ற மிகவும் மேன்மையான நிலையாகிய, பரம்பொருளைச் சென்று அடைகின்ற முக்திக்கான வழிமுறை ஒன்று இருக்கின்றது. ஆனால், அதில் நின்று இறைவனை அடையாமல், வெறும் உலக ஆசைகளுக்காகச் செய்யப்படுகின்ற வழிமுறைகளிலேயே அவர்கள் நிற்கின்றார்கள்.
There are hundreds of ways spoken of as being for reaching God. And so, when each takes up the one that suits him and follows it, all those hundreds of ways come within the six kinds of way for reaching God. Beyond all the ways that stand thus in six divisions, and beyond stopping at whichever way one has taken up, there is one way to liberation, the way of going and reaching the Supreme, which is that greatly exalted state attained by ripening in each way. But they do not stand in it and reach God; they stand only in the ways performed merely for worldly desires.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவனை அடைவதற்காக என்று சொல்லப்படுகின்ற நூற்றுக்கணக்கான வழிமுறைகள் இருக்கின்றன; ஆதலால், அவற்றில் அவரவர்க்கு ஏற்றதை எடுத்துக்கொண்டு கடைப்பிடிக்கும்போது,
There are hundreds of ways spoken of as being for reaching God; and so, when each takes up the one that suits him and follows it,
- வரி 2Line 2
இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழிமுறைகளுக்கு உள்ளேயே அந்த நூற்றுக்கணக்கான வழிமுறைகளும் அடங்கிவிடும்.
all those hundreds of ways come within the six kinds of way for reaching God.
- வரி 3Line 3
இப்படி ஆறு பிரிவுகளாக இருக்கின்ற வழிமுறைகள் அனைத்தும், தாம் எடுத்துக்கொண்ட வழிமுறையிலேயே நின்றுவிடாமல்,
Beyond all the ways that stand thus in six divisions, and beyond stopping at whichever way one has taken up,
- வரி 4Line 4
ஒவ்வொரு வழிமுறையிலும் பக்குவம் பெற்று அடைகின்ற மிகவும் மேன்மையான நிலையாகிய, பரம்பொருளைச் சென்று அடைகின்ற முக்திக்கான வழிமுறை ஒன்று இருக்கின்றது; ஆனால், அதில் நின்று இறைவனை அடையாமல், வெறும் உலக ஆசைகளுக்காகச் செய்யப்படுகின்ற வழிமுறைகளிலேயே அவர்கள் நிற்கின்றார்கள்.
there is one way to liberation, the way of going and reaching the Supreme, which is that greatly exalted state attained by ripening in each way; but they do not stand in it and reach God, and stand only in the ways performed merely for worldly desires.
திருமந்திரம் பாடல் #1537





