திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1536

ஐந்தாம் தந்திரம்21. புறச் சமய நிந்தனை

தொடர்ந்து படிக்கread this section continuously

சிவகதி யேகெதி மற்றுள்ள தெல்லாம்பவகதிப் பாசப் பிறவியொன் றுண்டுதவகதி தன்னோடு நேரொன்று தோன்றிலவகதி மூவரு மவ்வகை யாமே.

உரை

சிவப் பரம்பொருளைச் சரணடைவதே முக்திக்கான வழியாகும். சரணாகதியைத் தவிர வேறு விதமாக இருக்கின்ற வழிமுறைகள் அனைத்தும், உலக வாழ்க்கைக்கான வழியாக, பாசத் தளைகளுடன் மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பதற்காகவே இருக்கின்ற வழிமுறைகளாகும். சரணாகதியாகத் தவம் செய்கின்ற வழிமுறையைச் சாதகர்கள் முக்திக்கு நேரான ஒரே வழிமுறையாக எடுத்துக்கொண்டு செய்யாமல் போனால், துன்பமான பிறவிகளுக்கே வழியாக இருக்கின்ற மூன்று விதமான மலங்களும், துன்பமான பிறவி எடுப்பதற்கான வழிமுறைகளாகவே இருக்கும்.

வரி வாரியாக

  • வரி 1

    சிவப் பரம்பொருளைச் சரணடைவதே முக்திக்கான வழியாகும்.

  • வரி 2

    சரணாகதியைத் தவிர வேறு விதமாக இருக்கின்ற வழிமுறைகள் அனைத்தும், உலக வாழ்க்கைக்கான வழியாக, பாசத் தளைகளுடன் மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பதற்காகவே இருக்கின்ற வழிமுறைகளாகும்.

  • வரி 3

    சரணாகதியாகத் தவம் செய்கின்ற வழிமுறையைச் சாதகர்கள் முக்திக்கு நேரான ஒரே வழிமுறையாக எடுத்துக்கொண்டு செய்யாமல் போனால்,

  • வரி 4

    துன்பமான பிறவிகளுக்கே வழியாக இருக்கின்ற மூன்று விதமான மலங்களும், துன்பமான பிறவி எடுப்பதற்கான வழிமுறைகளாகவே இருக்கும்.

திருமந்திரம் பாடல் #1536

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout