திருமூலர் அருளிய திருமந்திரம்
20. தீவிர தரம்

ஐந்தாம் தந்திரம் பாடல் 1527–1529 (3 பாடல்கள்)

இருவினை நேரொப்பி லின்னருட் சத்திகுருவென வந்து குணம்பல நீக்கித்தருமெனு ஞானத்தாற் றன்செய லற்றால்திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே.

இரவும் பகலு மிறந்த விடத்தேகுரவன் செய்கின்ற குழலியை யுன்னயரவஞ் செய்யாம லவளுடன் சேரப்பரிவொன்றி லாளும் பராபரை தானே.

மாலை விளக்கும் மதியமு ஞாயிறுஞ்சால விளக்குந் தனிச்சுட ரண்ணலும்ஞாலம் விளக்கிய நாதனென் னுள்புகுந்தூனை விளக்கி யுடனிருந் தானே.

திருமந்திரம் பாடல் #1527

1 / 3

0:000:00
20. தீவிர தரம்பாடல் 1527

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout