தொடர்ந்து படிக்கread this section continuously
இருவினை நேரொப்பி லின்னருட் சத்திகுருவென வந்து குணம்பல நீக்கித்தருமெனு ஞானத்தாற் றன்செய லற்றால்திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே.
உரைmeaning
நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான வினைகளையும் சரிசமமாகப் பாவித்து அனுபவிக்கும் நிலையை அடைந்த சாதகருக்குள், தனக்கு ஒப்பானது என்று ஒன்றும் இல்லாதவளாகிய, இனிமையான பேரருளைக் கொண்ட இறைவியானவள் குரு எனும் நிலையில் வந்து, சாதகருக்குள் நன்மை தீமை என்று பல விதமாக இருக்கின்ற தன்மைகள் அனைத்தையும் நீக்கிவிட்டு, அவளுடைய பெருங் கருணையினால் தரப்படுவது என்று அறியப்படுகின்ற பேரறிவு ஞானத்தைத் தந்தருளுவாள். அந்த ஞானத்தால் சாதகர் தன்னுடைய செயல் என்று ஒன்றும் இல்லாமல் இருக்கும் நிலையை அடைந்துவிட்டால், சாதகருக்குள் இருக்கின்ற மூன்று விதமான மலங்களும் நீங்கப் பெற்று, சிவம் எனும் பரம்பொருளாகவே சாதகரும் ஆகிவிடுவார்.
Within the practitioner who has reached the state of regarding and undergoing both kinds of deed, the good and the bad, as equal, the Goddess of sweet and great grace, who has nothing at all that is equal to her, comes in the state of the guru, removes every one of the many qualities that stand within the practitioner as good and as bad, and grants the great wisdom that is known as what her immense compassion gives. If, by that wisdom, the practitioner reaches the state of having nothing that is his own action, then the three kinds of impurity that stand within him are removed, and the practitioner too becomes Sivam, the Supreme itself.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான வினைகளையும் சரிசமமாகப் பாவித்து அனுபவிக்கும் நிலையை அடைந்த சாதகருக்குள், தனக்கு ஒப்பானது என்று ஒன்றும் இல்லாதவளாகிய, இனிமையான பேரருளைக் கொண்ட இறைவியானவள்,
Within the practitioner who has reached the state of regarding and undergoing both kinds of deed, the good and the bad, as equal, the Goddess of sweet and great grace, who has nothing at all that is equal to her,
- வரி 2Line 2
குரு எனும் நிலையில் வந்து, சாதகருக்குள் நன்மை தீமை என்று பல விதமாக இருக்கின்ற தன்மைகள் அனைத்தையும் நீக்கிவிட்டு,
comes in the state of the guru, and removes every one of the many qualities that stand within the practitioner as good and as bad,
- வரி 3Line 3
அவளுடைய பெருங் கருணையினால் தரப்படுவது என்று அறியப்படுகின்ற பேரறிவு ஞானத்தைத் தந்தருளுவாள்; அந்த ஞானத்தால் சாதகர் தன்னுடைய செயல் என்று ஒன்றும் இல்லாமல் இருக்கும் நிலையை அடைந்துவிட்டால்,
and grants the great wisdom that is known as what her immense compassion gives; if, by that wisdom, the practitioner reaches the state of having nothing that is his own action,
- வரி 4Line 4
சாதகருக்குள் இருக்கின்ற மூன்று விதமான மலங்களும் நீங்கப் பெற்று, சிவம் எனும் பரம்பொருளாகவே சாதகரும் ஆகிவிடுவார்.
then the three kinds of impurity that stand within him are removed, and the practitioner too becomes Sivam, the Supreme itself.
திருமந்திரம் பாடல் #1527





