திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1528

ஐந்தாம் தந்திரம்20. தீவிர தரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

இரவும் பகலு மிறந்த விடத்தேகுரவன் செய்கின்ற குழலியை யுன்னயரவஞ் செய்யாம லவளுடன் சேரப்பரிவொன்றி லாளும் பராபரை தானே.

உரை

இரவு பகல் எனும் இரண்டு விதமான நிகழ்வுகளையும் உணராத அளவிற்குத் தன் நிலை மறந்திருக்கின்ற சாதகரின் உள்ளத்தில், குரவம் எனும் மலரைப் பின்னியிருக்கின்ற கூந்தலைக் கொண்ட இறைவியை அந்த உள்ளத்திலேயே நினைத்துக்கொண்டு, எந்த விதமான ஆரவாரமும் செய்யாமல் அவளோடு சேர்ந்து ஒன்றாக இலயித்திருந்தால், தனது மாபெரும் கருணை எனும் அருளினால் அவள் சாதகரை ஆட்கொண்டு அருளுவாள். பராவாகிய இறைவனும் பரையாகிய இறைவியும் சேர்ந்திருக்கும் அருள் சக்தி அவளே.

வரி வாரியாக

  • வரி 1

    இரவு பகல் எனும் இரண்டு விதமான நிகழ்வுகளையும் உணராத அளவிற்குத் தன் நிலை மறந்திருக்கின்ற சாதகரின் உள்ளத்தில்,

  • வரி 2

    குரவம் எனும் மலரைப் பின்னியிருக்கின்ற கூந்தலைக் கொண்ட இறைவியை அந்த உள்ளத்திலேயே நினைத்துக்கொண்டு,

  • வரி 3

    எந்த விதமான ஆரவாரமும் செய்யாமல் அவளோடு சேர்ந்து ஒன்றாக இலயித்திருந்தால்,

  • வரி 4

    தனது மாபெரும் கருணை எனும் அருளினால் அவள் சாதகரை ஆட்கொண்டு அருளுவாள்; பராவாகிய இறைவனும் பரையாகிய இறைவியும் சேர்ந்திருக்கும் அருள் சக்தி அவளே.

திருமந்திரம் பாடல் #1528

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout