திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1529

ஐந்தாம் தந்திரம்20. தீவிர தரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

மாலை விளக்கும் மதியமு ஞாயிறுஞ்சால விளக்குந் தனிச்சுட ரண்ணலும்ஞாலம் விளக்கிய நாதனென் னுள்புகுந்தூனை விளக்கி யுடனிருந் தானே.

உரை

அந்தி சாயும் வேளையில் வெளிச்சத்திற்காக ஏற்றப்படுகின்ற விளக்குகளில் இருந்து வருகின்ற ஒளியையும், இரவு நேரங்களில் நிலவில் இருந்து வருகின்ற ஒளியையும், பகல் நேரங்களில் சூரியனில் இருந்து வருகின்ற ஒளியையும், இறைவனை வணங்கும் பூஜைகளில் ஏற்றி வைக்கின்ற தீபங்களில் இருந்து வருகின்ற ஒளியையும், தனிப் பெரும் சுடராக இருக்கின்ற இறைவனின் ஜோதி உருவமாகவே சாதகர் பார்த்து உணர்ந்தால், உலகத்தை விளக்கி அருளுகின்ற தலைவனாகிய இறைவன் அவரது உடலுக்குள் புகுந்து வந்து, அவரது உடலுக்குள் இருக்கின்ற உண்மைப் பொருளையும் விளக்கி அவர் அறியும்படி செய்து, அவருடன் எப்போதும் இருப்பான்.

வரி வாரியாக

  • வரி 1

    அந்தி சாயும் வேளையில் வெளிச்சத்திற்காக ஏற்றப்படுகின்ற விளக்குகளில் இருந்து வருகின்ற ஒளியையும், இரவு நேரங்களில் நிலவில் இருந்து வருகின்ற ஒளியையும், பகல் நேரங்களில் சூரியனில் இருந்து வருகின்ற ஒளியையும்,

  • வரி 2

    இறைவனை வணங்கும் பூஜைகளில் ஏற்றி வைக்கின்ற தீபங்களில் இருந்து வருகின்ற ஒளியையும், தனிப் பெரும் சுடராக இருக்கின்ற இறைவனின் ஜோதி உருவமாகவே சாதகர் பார்த்து உணர்ந்தால்,

  • வரி 3

    உலகத்தை விளக்கி அருளுகின்ற தலைவனாகிய இறைவன் அவரது உடலுக்குள் புகுந்து வந்து,

  • வரி 4

    அவரது உடலுக்குள் இருக்கின்ற உண்மைப் பொருளையும் விளக்கி அவர் அறியும்படி செய்து, அவருடன் எப்போதும் இருப்பான்.

திருமந்திரம் பாடல் #1529

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout