தொடர்ந்து படிக்கread this section continuously
நணுகினு ஞானக் கொழுந்தொன்று நல்கும்பணிகிலும் பன்மலர் தூவிப் பணிவனணுகிய வொன் றறியாத வொருவனணுகு முலகெங்கு மாவியு மாமே.
உரைmeaning
அருள் சக்தியை நெருங்கிச் சென்று அடைந்தால், ஞானத்தின் உச்சமாக இருக்கின்ற பேரறிவு ஞானத்தை அந்த அருட் சக்தியே வழங்குவாள். அப்படி இல்லாமல், அருள் சக்தியை ஞானத்தால் நெருங்கி அடைய முடியாவிட்டாலும், பல விதமான மலர்களைத் தூவி வணங்கி வழிபடும்போது, அந்த வழிபாட்டின் பயனால், நம்மை நெருங்கி வரும் அருட் சக்தியைத் தன் அறிவால் முழுவதுமாக அறிந்துகொள்ள முடியாத சாதகனாக ஒருவன் இருந்தாலும், அருள் சக்தி வழங்கும் ஞானத்தால் அறியும்போது, அவன் இருக்கின்ற உலகம் மட்டுமின்றி அனைத்து உலகங்கள் எங்கும் இருக்கின்ற அனைத்துப் பொருள்களிலும் நிற்கின்ற ஆன்மாவாக அந்த அருட் சக்தியே இருக்கின்றாள் என்பதை அறிந்துகொள்ளலாம்.
If one draws near to the power of grace and reaches her, that power of grace herself grants the great wisdom that is the summit of all wisdom. And if instead one cannot draw near to her and reach her by wisdom, then when one strews many kinds of flowers and bows and worships, by the fruit of that worship, even for a seeker who cannot fully know by his own understanding the power of grace who comes near us, when he comes to know by the wisdom that the power of grace grants, he may know this: that in every object in every world, and not only in the world where he is, it is that power of grace herself who stands as the soul.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
அருள் சக்தியை நெருங்கிச் சென்று அடைந்தால், ஞானத்தின் உச்சமாக இருக்கின்ற பேரறிவு ஞானத்தை அந்த அருட் சக்தியே வழங்குவாள்.
If one draws near to the power of grace and reaches her, that power of grace herself grants the great wisdom that is the summit of all wisdom.
- வரி 2Line 2
அப்படி இல்லாமல், அருள் சக்தியை ஞானத்தால் நெருங்கி அடைய முடியாவிட்டாலும், பல விதமான மலர்களைத் தூவி வணங்கி வழிபடும்போது, அந்த வழிபாட்டின் பயனால்,
And if instead one cannot draw near to her and reach her by wisdom, then when one strews many kinds of flowers and bows and worships, by the fruit of that worship,
- வரி 3Line 3
நம்மை நெருங்கி வரும் அருட் சக்தியைத் தன் அறிவால் முழுவதுமாக அறிந்துகொள்ள முடியாத சாதகனாக ஒருவன் இருந்தாலும், அருள் சக்தி வழங்கும் ஞானத்தால் அறியும்போது,
even for a seeker who cannot fully know by his own understanding the power of grace who comes near us, when he comes to know by the wisdom that the power of grace grants,
- வரி 4Line 4
அவன் இருக்கின்ற உலகம் மட்டுமின்றி அனைத்து உலகங்கள் எங்கும் இருக்கின்ற அனைத்துப் பொருள்களிலும் நிற்கின்ற ஆன்மாவாக அந்த அருட் சக்தியே இருக்கின்றாள் என்பதை அறிந்துகொள்ளலாம்.
he may know this: that in every object in every world, and not only in the world where he is, it is that power of grace herself who stands as the soul.
திருமந்திரம் பாடல் #1526





