தொடர்ந்து படிக்கread this section continuously
தாங்குமின் னெட்டுத் திசைக்குந் தலைமகள்பூங்கமழ் பொய்கைப் புரிகுழ லாளோடுமாங்கது சேரு மறிவுடை யாளர்க்குத்தூங்கொளி நீலந் தொடர்தலு மாமே.
உரைmeaning
எட்டு விதமான திசைகளுக்கும் தலைவியாக வீற்றிருக்கின்ற இறைவியைச் சாதகர்கள் தங்களின் உள்ளத்திற்குள் தாங்கிக்கொண்டால், நறுமணமிக்க மலரிலிருந்து வருகின்ற நறுமணம் பரந்து விரிகின்ற, ஊற்றுப் பெருகும் பொய்கையில் அருள் புரிகின்ற, சுருண்ட கூந்தலைக் கொண்ட அந்த இறைவியோடு அங்கே சேருகின்ற அறிவு உடையவர்களுக்கு, இதுவரை தூங்கிக்கொண்டு இருந்த ஜோதியாகிய நீல நிற ஒளி விழிப்புப் பெறும்; அதனால் உருவாகும் பேரறிவு ஞானம் அந்தச் சாதகருக்கு எப்போதும் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
If seekers bear within their hearts the Goddess who is seated as mistress of all eight directions, then for those who have the wisdom to join her there, the Goddess of curling hair who grants her grace at the spring-fed pond where the fragrance of fragrant flowers spreads wide, the blue radiance that has slept until now awakens; and the great wisdom that arises from its waking continues with that seeker always.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
எட்டு விதமான திசைகளுக்கும் தலைவியாக வீற்றிருக்கின்ற இறைவியைச் சாதகர்கள் தங்களின் உள்ளத்திற்குள் தாங்கிக்கொண்டால்,
If seekers bear within their hearts the Goddess who is seated as mistress of all eight directions,
- வரி 2Line 2
நறுமணமிக்க மலரிலிருந்து வருகின்ற நறுமணம் பரந்து விரிகின்ற, ஊற்றுப் பெருகும் பொய்கையில் அருள் புரிகின்ற, சுருண்ட கூந்தலைக் கொண்ட அந்த இறைவியோடு,
then together with the Goddess of curling hair who grants her grace at the spring-fed pond where the fragrance of fragrant flowers spreads wide,
- வரி 3Line 3
அங்கே சேருகின்ற அறிவு உடையவர்களுக்கு,
for those who have the wisdom to join her there,
- வரி 4Line 4
இதுவரை தூங்கிக்கொண்டு இருந்த ஜோதியாகிய நீல நிற ஒளி விழிப்புப் பெறும்; அதனால் உருவாகும் பேரறிவு ஞானம் அந்தச் சாதகருக்கு எப்போதும் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
the blue radiance that has slept until now awakens, and the great wisdom that arises from its waking continues with that seeker always.
திருமந்திரம் பாடல் #1525





