திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1524

தொடர்ந்து படிக்கread this section continuously

பிறப்பை யறுக்கும் பெருந்தவ நல்குமறப்பை யறுக்கும் வழிபட வைக்குங்குறப்பெண் குவிமுலைக் கோமள வல்லிசிறப்பொடு பூசனை செய்யநின் றாளே.

உரை

இனிமேல் எடுக்க வேண்டிய அனைத்துப் பிறவிகளையும் அறுத்துவிடக்கூடிய மிகப் பெரும் தவத்தை அருளுபவளாகவும், இறைவனிடமிருந்தே பிரிந்து வந்திருக்கின்றோம் என்பதை மறந்துவிட்டு மாயையில் இருக்கின்ற நிலையை அறுக்கின்ற வழியில் சாதகர்களைச் செல்ல வைக்கின்றவளாகவும், அதற்குத் தேவையான அனைத்து ஞானங்களையும் அருளுகின்ற சக்தியாகவும், குவிந்த மார்பகங்களின் மூலம் அமிழ்தத்தை வழங்குபவளாகவும், அடியவர்களைத் தன்பால் ஈர்க்கின்ற பேரழகுடன் என்றும் இளமையானவளாகவும் இருக்கின்ற இறைவியானவள், சிறப்புப் பொருந்தியவளாக அவர்களைப் பூஜைகள் செய்ய வைத்துக்கொண்டே, அருட் சக்தியாக எப்போதும் சேர்ந்தே நிற்கின்றாள்.

வரி வாரியாக

  • வரி 1

    இனிமேல் எடுக்க வேண்டிய அனைத்துப் பிறவிகளையும் அறுத்துவிடக்கூடிய மிகப் பெரும் தவத்தை அருளுபவளாகவும்,

  • வரி 2

    இறைவனிடமிருந்தே பிரிந்து வந்திருக்கின்றோம் என்பதை மறந்துவிட்டு மாயையில் இருக்கின்ற நிலையை அறுக்கின்ற வழியில் சாதகர்களைச் செல்ல வைக்கின்றவளாகவும்,

  • வரி 3

    அதற்குத் தேவையான அனைத்து ஞானங்களையும் அருளுகின்ற சக்தியாகவும், குவிந்த மார்பகங்களின் மூலம் அமிழ்தத்தை வழங்குபவளாகவும், அடியவர்களைத் தன்பால் ஈர்க்கின்ற பேரழகுடன் என்றும் இளமையானவளாகவும் இருக்கின்ற இறைவியானவள்,

  • வரி 4

    சிறப்புப் பொருந்தியவளாக அவர்களைப் பூஜைகள் செய்ய வைத்துக்கொண்டே, அருட் சக்தியாக எப்போதும் சேர்ந்தே நிற்கின்றாள்.

திருமந்திரம் பாடல் #1524

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout