திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1523

தொடர்ந்து படிக்கread this section continuously

கன்னிக்கும் பெண்பிள்ளை யப்பனார் தோட்டத்திலெண்ணிக்கு மேழேழ் பிறவி யுணர்விக்குமுண்ணிற்ப தெல்லா மொழிவ முதல்வனைக்கண்ணுற்று நின்ற கனியது வாகுமே.

உரை

எப்போதும் இளமையுடன் இயங்கிக்கொண்டே இருக்கின்ற, பெண் தன்மை கொண்ட பிள்ளையாகிய இறைவியின் அருட் சக்திக்குத் தந்தையாக இருக்கின்ற இறைவனுக்குச் சொந்தமாகிய, அண்ட சராசரங்கள் எனும் தோட்டத்தில் இருக்கும், எண்ணிலடங்காத அளவிற்கு இருக்கின்ற மொத்தம் பதினான்கு உலகங்களிலும் பல விதமாக எடுக்கின்ற அனைத்துப் பிறவிகளையும் சாதகருக்கு உணர வைத்து, சாதகருக்குள் நிற்கின்ற மும்மலங்களாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகிய அனைத்தையும் அழிய வைக்கின்ற ஆதி மூலமாகிய இறைவனை அடையச் செய்து, சாதகரின் கண்ணிற்கு உள்ளே நின்று அனைத்தையும் உணர வைக்கின்ற பேரின்ப ஞானமாக அந்த அருள் சக்தியே இருக்கின்றாள்.

வரி வாரியாக

  • வரி 1

    எப்போதும் இளமையுடன் இயங்கிக்கொண்டே இருக்கின்ற, பெண் தன்மை கொண்ட பிள்ளையாகிய இறைவியின் அருட் சக்திக்குத் தந்தையாக இருக்கின்ற இறைவனுக்குச் சொந்தமாகிய, அண்ட சராசரங்கள் எனும் தோட்டத்தில்,

  • வரி 2

    எண்ணிலடங்காத அளவிற்கு இருக்கின்ற மொத்தம் பதினான்கு உலகங்களிலும் பல விதமாக எடுக்கின்ற அனைத்துப் பிறவிகளையும் சாதகருக்கு உணர வைத்து,

  • வரி 3

    சாதகருக்குள் நிற்கின்ற மும்மலங்களாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகிய அனைத்தையும் அழிய வைக்கின்ற ஆதி மூலமாகிய இறைவனை அடையச் செய்து,

  • வரி 4

    சாதகரின் கண்ணிற்கு உள்ளே நின்று அனைத்தையும் உணர வைக்கின்ற பேரின்ப ஞானமாக அந்த அருள் சக்தியே இருக்கின்றாள்.

திருமந்திரம் பாடல் #1523

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout