திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1522

தொடர்ந்து படிக்கread this section continuously

கண்டுகொண் டோமிரண்டுந் தொடர்ந் தாங்கொளிபண்டுகண் டோயும் பரமன் பரஞ்சுடர்வண்டுகொண் டாடும வளர்சடை யண்ணலைக்கண்டுகொண் டோர்க்கிருள் நீங்கிநின் றானே.

உரை

இறைவியும் இறைவனும் பிணைந்து தொடர்ச்சியாக விளங்குகின்ற ஆகாயத்தில் இருக்கின்ற ஒளியைக் கண்டுகொண்டோம். ஆதிகாலத்திலிருந்தே இருக்கின்ற அந்த ஒளியைக் கண்டு, அந்த ஒளியின் நுணுக்கத்தை உணர்ந்தது என்னவென்றால், பரம்பொருளாகிய இறைவனே அந்தப் பரம் ஜோதியாகவும் இருக்கின்றான் என்பதே ஆகும். வண்டுகள் நறுமணமிக்க மலர்களில் உள்ள தேனை உண்டு களிப்பில் ஆடுவது போல, அடியவர்களைத் தன் அமிழ்தத்தினை உண்டு பேரின்பத்தில் ஆடச் செய்கின்ற, நீண்டு வளருகின்ற பிணைந்த சடையை அணிந்திருக்கின்ற, தலைவனும் அடியவனுமாகிய இறைவனைத் தமக்குள் இருக்கும் ஜோதியாகக் கண்டு உணர்ந்துகொண்டவர்களுக்கு, மாயை நீங்கி, இறைவன் எப்போதும் அருள் சக்தியாக நிற்கின்றான்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவியும் இறைவனும் பிணைந்து தொடர்ச்சியாக விளங்குகின்ற ஆகாயத்தில் இருக்கின்ற ஒளியைக் கண்டுகொண்டோம்.

  • வரி 2

    ஆதிகாலத்திலிருந்தே இருக்கின்ற அந்த ஒளியைக் கண்டு, அந்த ஒளியின் நுணுக்கத்தை உணர்ந்தது என்னவென்றால், பரம்பொருளாகிய இறைவனே அந்தப் பரம் ஜோதியாகவும் இருக்கின்றான் என்பதே ஆகும்.

  • வரி 3

    வண்டுகள் நறுமணமிக்க மலர்களில் உள்ள தேனை உண்டு களிப்பில் ஆடுவது போல, அடியவர்களைத் தன் அமிழ்தத்தினை உண்டு பேரின்பத்தில் ஆடச் செய்கின்ற, நீண்டு வளருகின்ற பிணைந்த சடையை அணிந்திருக்கின்ற, தலைவனும் அடியவனுமாகிய இறைவனை,

  • வரி 4

    தமக்குள் இருக்கும் ஜோதியாகக் கண்டு உணர்ந்துகொண்டவர்களுக்கு, மாயை நீங்கி, இறைவன் எப்போதும் அருள் சக்தியாக நிற்கின்றான்.

திருமந்திரம் பாடல் #1522

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout