தொடர்ந்து படிக்கread this section continuously
எய்திய காலங்க ளெத்தனை யாயினுந்தையலுந் தானுந் தனிநாயக மென்பர்வைகலுந் தன்னை வணங்கு மவர்கட்குக்கையிற் கருமஞ்செய் கோட்டது வாமே.
உரைmeaning
சாதகர்கள் இறைவனை எந்த வடிவத்திலும் எந்தத் தன்மையிலும், தாம் எடுத்துக்கொண்ட எந்தச் சாதகத்தின் மூலமாகவும் சாதகம் செய்து வழிபடுகின்ற காலங்கள் எத்தனை எத்தனை வருடங்களாக இருந்தாலும், ஒன்றோடு ஒன்று தைப்பது போலப் பிணைந்து இருக்கின்ற இறைவியும் இறைவனும் சாதகர்கள் வணங்கக்கூடிய அனைத்து வடிவத்திற்கும் அனைத்துத் தன்மைக்கும் ஒரே தலைவராக இருக்கின்றார் என்பதைத் தமக்குள் உணர்ந்தவர்கள் சொல்லுவார்கள். ஆகவே, தினந்தோறும் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து, எந்த வடிவத்திலும் எந்தத் தன்மையிலும் இறைவனை வணங்குகின்ற சாதகர்களுக்கு, அவர்களின் கைகளினால் சாதகங்கள் செய்த வழிபாட்டிற்கு, அவர்களின் கையில் இருக்கின்ற ரேகைகள் போலவே உடனுக்குடன் பலன்களைத் தருபவனாக இறைவன் இருக்கின்றான்.
However many years the seasons may run in which seekers perform their practice and worship God in whatever form and whatever quality, through whatever practice they have taken up, those who have realized it within themselves will say that the Goddess and God, interwoven with each other as though stitched together, are the one sole lord of every form and every quality a seeker may worship. And so, to seekers who rise each day before sunrise and bow to God in whatever form and whatever quality, God gives the fruits of the worship their own hands have performed at once, as readily as the lines that lie on their own palms.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
சாதகர்கள் இறைவனை எந்த வடிவத்திலும் எந்தத் தன்மையிலும், தாம் எடுத்துக்கொண்ட எந்தச் சாதகத்தின் மூலமாகவும் சாதகம் செய்து வழிபடுகின்ற காலங்கள் எத்தனை எத்தனை வருடங்களாக இருந்தாலும்,
However many years the seasons may run in which seekers perform their practice and worship God in whatever form and whatever quality, through whatever practice they have taken up,
- வரி 2Line 2
ஒன்றோடு ஒன்று தைப்பது போலப் பிணைந்து இருக்கின்ற இறைவியும் இறைவனும் சாதகர்கள் வணங்கக்கூடிய அனைத்து வடிவத்திற்கும் அனைத்துத் தன்மைக்கும் ஒரே தலைவராக இருக்கின்றார் என்பதைத் தமக்குள் உணர்ந்தவர்கள் சொல்லுவார்கள்.
those who have realized it within themselves will say that the Goddess and God, interwoven with each other as though stitched together, are the one sole lord of every form and every quality a seeker may worship.
- வரி 3Line 3
ஆகவே, தினந்தோறும் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து, எந்த வடிவத்திலும் எந்தத் தன்மையிலும் இறைவனை வணங்குகின்ற சாதகர்களுக்கு,
And so, to seekers who rise each day before sunrise and bow to God in whatever form and whatever quality,
- வரி 4Line 4
அவர்களின் கைகளினால் சாதகங்கள் செய்த வழிபாட்டிற்கு, அவர்களின் கையில் இருக்கின்ற ரேகைகள் போலவே உடனுக்குடன் பலன்களைத் தருபவனாக இறைவன் இருக்கின்றான்.
God gives the fruits of the worship their own hands have performed at once, as readily as the lines that lie on their own palms.
திருமந்திரம் பாடல் #1521





