திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1520

தொடர்ந்து படிக்கread this section continuously

செய்யன் கரியன் வெளியனற் பச்சையனெய்த வுணர்ந்தவ ரெய்து மிறைவனைமையன் கண்ணறப் பகடுரி போர்த்தவெங்கைய னிவனென்று காதல்செய் வீரே.

உரை

சிவந்த மேனியில் அருளை வழங்குபவன், கரிய மேனியில் மாயையால் மறைக்கின்றவன், வெள்ளை மேனியில் அண்ட சராசரங்கள் அனைத்திலும் ஜோதியாய்ப் பரவி இருக்கின்றவன், நன்மையைத் தந்து பச்சை மேனியில் ஆன்மாக்களைக் காத்து அருளுகின்றவன்; இப்படிப் பலவிதமான தன்மைகளைக் கண்டு உணர்ந்துகொண்டவர்களுக்கு, அவர்கள் கண்ட தன்மையிலேயே அருளை வழங்குகின்ற இறைவனை, கருமை நிறம் கொண்டு அகங்காரத்தை இல்லாமல் செய்து, யானையின் தோல் போன்ற ஆணவத்தை உரித்து எடுத்துத் தம்மேல் போர்த்திக்கொண்டு, நெருப்புக் கணலைக் கையில் கொண்டு பிறவிகளை அறுத்து முக்தியை அருளுபவன் அவனே என்று உணர்ந்து, அவன் மேல் பேரன்பு கொள்ளுங்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    சிவந்த மேனியில் அருளை வழங்குபவன், கரிய மேனியில் மாயையால் மறைக்கின்றவன், வெள்ளை மேனியில் அண்ட சராசரங்கள் அனைத்திலும் ஜோதியாய்ப் பரவி இருக்கின்றவன், நன்மையைத் தந்து பச்சை மேனியில் ஆன்மாக்களைக் காத்து அருளுகின்றவன்;

  • வரி 2

    இப்படிப் பலவிதமான தன்மைகளைக் கண்டு உணர்ந்துகொண்டவர்களுக்கு, அவர்கள் கண்ட தன்மையிலேயே அருளை வழங்குகின்ற இறைவனை,

  • வரி 3

    கருமை நிறம் கொண்டு அகங்காரத்தை இல்லாமல் செய்து, யானையின் தோல் போன்ற ஆணவத்தை உரித்து எடுத்துத் தம்மேல் போர்த்திக்கொண்டு, நெருப்புக் கணலைக் கையில் கொண்டு,

  • வரி 4

    பிறவிகளை அறுத்து முக்தியை அருளுபவன் அவனே என்று உணர்ந்து, அவன் மேல் பேரன்பு கொள்ளுங்கள்.

திருமந்திரம் பாடல் #1520

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout