திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1519

தொடர்ந்து படிக்கread this section continuously

கன்னித் துறைபடிந் தாடிய வாடவர்கன்னித் துறைபடிந் தாடுங் கருத்திலர்கன்னித் துறைபடிந் தாடுங் கருத்துண்டேல்பின்னைப் பிறவி பிறிதில்லைத் தானே.

உரை

அருள் சக்தி வருகின்ற வழியின் முறையைக் கடைபிடித்து அதன்படியே நடக்கின்ற சாதகர்கள், அந்த முறையைக் கடைபிடிப்பதின் மூலம் பிறவிக்கான வினைகளை அறுத்துப் பிறவி இல்லாத நிலையை எவ்வாறு பெறுவது எனும் ஞானம் இல்லாதவராகவே இருக்கின்றார்கள். அருள் சக்தி வருகின்ற வழியின் முறையைக் கடைபிடித்து அதன்படியே நடந்து, பிறவிக்கான வினைகளை அறுத்துப் பிறவி இல்லாத நிலையைப் பெறுகின்ற அந்த ஞானத்தைத் தமது இடைவிடாத சாதகத்தினால் சாதகர்கள் அறிந்துகொண்டுவிட்டால், இனிப் பிறக்க வேண்டிய பிறவி என்று வேறு எதுவும் அவர்களுக்கு இல்லாமல் போய்விடும்.

வரி வாரியாக

  • வரி 1

    அருள் சக்தி வருகின்ற வழியின் முறையைக் கடைபிடித்து அதன்படியே நடக்கின்ற சாதகர்கள்,

  • வரி 2

    அந்த முறையைக் கடைபிடிப்பதின் மூலம் பிறவிக்கான வினைகளை அறுத்துப் பிறவி இல்லாத நிலையை எவ்வாறு பெறுவது எனும் ஞானம் இல்லாதவராகவே இருக்கின்றார்கள்.

  • வரி 3

    அருள் சக்தி வருகின்ற வழியின் முறையைக் கடைபிடித்து அதன்படியே நடந்து, பிறவிக்கான வினைகளை அறுத்துப் பிறவி இல்லாத நிலையைப் பெறுகின்ற அந்த ஞானத்தைத் தமது இடைவிடாத சாதகத்தினால் சாதகர்கள் அறிந்துகொண்டுவிட்டால்,

  • வரி 4

    இனிப் பிறக்க வேண்டிய பிறவி என்று வேறு எதுவும் அவர்களுக்கு இல்லாமல் போய்விடும்.

திருமந்திரம் பாடல் #1519

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout