தொடர்ந்து படிக்கread this section continuously
மருட்டிப் புணர்ந்து மயக்கமு நீக்கிவெருட்டி வினையறுத் தின்பம் விளைத்துக்குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டியருட்டிகழ் ஞான மதுபுரிந் தாளே.
உரைmeaning
சாதகர்கள் தன்னை நினைந்து உருகும்படிச் செய்து, அவர்களோடு எப்போதும் சேர்ந்தே இருந்து, மாயையாகிய மயக்கத்தை நீக்கிவிட்டு, வினைகள் விரைவாக நீங்கிச் செல்லும்படி மிரட்டி அவற்றை அறுத்துவிட்டு, பேரின்பத்தை அனுபவிக்கும்படிச் செய்து, மாயையினால் உண்மையை அறியும் ஞானக்கண் இல்லாமல் இருக்கின்ற குருட்டுத் தன்மையை நீக்கிவிட்டு, இறைவனின் தன்மைகளைப் பல விதங்களில் கண்டு உணரும்படிச் செய்து, பேரருள் திகழ்கின்ற உண்மை ஞானத்தைச் சாதகர்கள் அடையும்படிச் செய்து அருளுகின்றாள் இறை சக்தி.
Making seekers melt in the thought of her, remaining always joined with them, removing the bewilderment that is illusion, driving their deeds off so that they depart in haste and cutting them away, causing them to know supreme bliss, removing the blindness in which illusion leaves them without the eye of wisdom that sees the truth, causing them to see and realize God's qualities in many ways, and granting that seekers attain the true wisdom in which great grace shines: this is what the divine power does in her grace.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
சாதகர்கள் தன்னை நினைந்து உருகும்படிச் செய்து, அவர்களோடு எப்போதும் சேர்ந்தே இருந்து, மாயையாகிய மயக்கத்தை நீக்கிவிட்டு,
Making seekers melt in the thought of her, remaining always joined with them, removing the bewilderment that is illusion,
- வரி 2Line 2
வினைகள் விரைவாக நீங்கிச் செல்லும்படி மிரட்டி அவற்றை அறுத்துவிட்டு, பேரின்பத்தை அனுபவிக்கும்படிச் செய்து,
driving their deeds off so that they depart in haste and cutting them away, causing them to know supreme bliss,
- வரி 3Line 3
மாயையினால் உண்மையை அறியும் ஞானக்கண் இல்லாமல் இருக்கின்ற குருட்டுத் தன்மையை நீக்கிவிட்டு, இறைவனின் தன்மைகளைப் பல விதங்களில் கண்டு உணரும்படிச் செய்து,
removing the blindness in which illusion leaves them without the eye of wisdom that sees the truth, causing them to see and realize God's qualities in many ways,
- வரி 4Line 4
பேரருள் திகழ்கின்ற உண்மை ஞானத்தைச் சாதகர்கள் அடையும்படிச் செய்து அருளுகின்றாள் இறை சக்தி.
and granting that seekers attain the true wisdom in which great grace shines: this is what the divine power does in her grace.
திருமந்திரம் பாடல் #1518





