தொடர்ந்து படிக்கread this section continuously
இருள்சூ ழறையி லிருந்தது நாடில்பொருள்சூழ் விளக்கது புக்கெரிந் தாப்போல்மருள்சூழ் மயக்கத்து மாமலர் நந்தியருள்சூ ழிறைவனு மம்மையு மாமே.
உரைmeaning
மாயையால் சூழப்பட்டு இருக்கின்ற அறையாகிய உடம்பிற்குள் மறைந்து இருக்கின்ற உண்மைப் பொருளைத் தேடி அடைந்தால், இருண்ட அறையில் தம்மைச் சுற்றி இருக்கின்ற பொருள்களைக் காண்பிக்கும் விளக்கைப் போலவே, மூலாதாரத்தில் இருக்கின்ற சோதி சாதகத்தின் மூலம் ஏற்றி வைக்கப்பட்டால், மாயை சூழ்ந்த மயக்கத்தில் இதுவரை வெளிப்படாமல் இதயத் தாமரையாகிய மாபெரும் மலரில் வீற்றிருக்கின்ற குருநாதராகிய இறைவன் வெளிப்பட்டு, அவரே அருள் சூழ்ந்து இருக்கின்ற தந்தையாகவும் தாயாகவும் இருப்பார்.
If one seeks and reaches the true reality that lies hidden within the body, which is a room encircled by illusion, then, just as a lamp shows the things standing around one in a dark room, when the light at the Muladhara is kindled through practice, God the guru, who until then had not come forth amid the bewilderment that illusion encircles and who is seated on the great flower that is the lotus of the heart, comes forth, and he himself will be the father and the mother encircled with grace.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
மாயையால் சூழப்பட்டு இருக்கின்ற அறையாகிய உடம்பிற்குள் மறைந்து இருக்கின்ற உண்மைப் பொருளைத் தேடி அடைந்தால்,
If one seeks and reaches the true reality that lies hidden within the body, which is a room encircled by illusion,
- வரி 2Line 2
இருண்ட அறையில் தம்மைச் சுற்றி இருக்கின்ற பொருள்களைக் காண்பிக்கும் விளக்கைப் போலவே, மூலாதாரத்தில் இருக்கின்ற சோதி சாதகத்தின் மூலம் ஏற்றி வைக்கப்பட்டால்,
then, just as a lamp shows the things standing around one in a dark room, when the light at the Muladhara is kindled through practice,
- வரி 3Line 3
மாயை சூழ்ந்த மயக்கத்தில் இதுவரை வெளிப்படாமல் இதயத் தாமரையாகிய மாபெரும் மலரில் வீற்றிருக்கின்ற குருநாதராகிய இறைவன் வெளிப்பட்டு,
God the guru, who until then had not come forth amid the bewilderment that illusion encircles and who is seated on the great flower that is the lotus of the heart, comes forth,
- வரி 4Line 4
அவரே அருள் சூழ்ந்து இருக்கின்ற தந்தையாகவும் தாயாகவும் இருப்பார்.
and he himself will be the father and the mother encircled with grace.
திருமந்திரம் பாடல் #1517





