இருட்டறை மூலை யிருந்த குமரிகுருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டிமருட்டி யவனை மணம்புணர்ந் தாளே.
ஐந்தாம் தந்திரம் பாடல் 1514–1517 (4 பாடல்கள்)
தீம்புன லான திகையது சிந்திக்கிலாம்புன லாய்வறி வார்க்கமு தாய்நிற்குந்தேம்புன லான தெளிவறி வார்கட்குக்கோம்புன லாடிய கொல்லையு மாமே.
இருணீக்கி யெண்ணில் பிறவி கடத்தியருணீங்கா வண்ணமே யாதி யருளுமருணீங்கா வானவர் கோனோடுங் கூடிப்பொருணீங்கா வின்பம் புலம்பயில் தானே.
இருள்சூ ழறையி லிருந்தது நாடில்பொருள்சூழ் விளக்கது புக்கெரிந் தாப்போல்மருள்சூழ் மயக்கத்து மாமலர் நந்தியருள்சூ ழிறைவனு மம்மையு மாமே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #1514
1 / 4
0:000:00
17. சத்தி நிபாதம்பாடல் 1514




