திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1516

ஐந்தாம் தந்திரம்17. சத்தி நிபாதம்

தொடர்ந்து படிக்கread this section continuously

இருணீக்கி யெண்ணில் பிறவி கடத்தியருணீங்கா வண்ணமே யாதி யருளுமருணீங்கா வானவர் கோனோடுங் கூடிப்பொருணீங்கா வின்பம் புலம்பயில் தானே.

உரை

மாயையை நீக்கிவிட்டு, தாம் எடுக்க வேண்டிய எண்ண முடியாத பிறவிகளை அந்தந்தப் பிறவிகளை எடுக்காமலேயே கடந்து போகும்படிச் செய்து, இறையருளானது எப்போதும் தம்மை விட்டு நீங்கிவிடாதபடியே ஆதிப் பரம்பொருள் அருளி, தனக்கென்று ஒரு பெயருடன் அகங்காரம் நீங்காமல் இருக்கின்ற வானவர்களின் அரசனாக இருக்கின்ற இறைவனோடு எப்போதும் சேர்ந்தே இருக்கும்படிச் செய்து, என்ன வேண்டுமென்றாலும் அதைப் பெற்றுக்கொண்டே இருக்கின்ற நிலையிலிருந்து நீங்கிவிடாதபடி பேரின்பத்திலேயே, இந்த உலகத்தில் தாம் இருக்கின்ற இடத்திலேயே, தாம் செய்துகொண்டு இருக்கின்ற சாதகத்தைத் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கும்படிச் செய்து அருளுகின்றது இறை சக்தி.

வரி வாரியாக

  • வரி 1

    மாயையை நீக்கிவிட்டு, தாம் எடுக்க வேண்டிய எண்ண முடியாத பிறவிகளை அந்தந்தப் பிறவிகளை எடுக்காமலேயே கடந்து போகும்படிச் செய்து,

  • வரி 2

    இறையருளானது எப்போதும் தம்மை விட்டு நீங்கிவிடாதபடியே ஆதிப் பரம்பொருள் அருளி,

  • வரி 3

    தனக்கென்று ஒரு பெயருடன் அகங்காரம் நீங்காமல் இருக்கின்ற வானவர்களின் அரசனாக இருக்கின்ற இறைவனோடு எப்போதும் சேர்ந்தே இருக்கும்படிச் செய்து,

  • வரி 4

    என்ன வேண்டுமென்றாலும் அதைப் பெற்றுக்கொண்டே இருக்கின்ற நிலையிலிருந்து நீங்கிவிடாதபடி பேரின்பத்திலேயே, இந்த உலகத்தில் தாம் இருக்கின்ற இடத்திலேயே, தாம் செய்துகொண்டு இருக்கின்ற சாதகத்தைத் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கும்படிச் செய்து அருளுகின்றது இறை சக்தி.

திருமந்திரம் பாடல் #1516

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout