தொடர்ந்து படிக்கread this section continuously
உள்ளத்து முள்ளன் புறத்துள னென்பவர்க்குள்ளத்து முள்ளன் புறத்துள னெம்மிறையுள்ளத்து மில்லைப் புறத்தில்லை யென்பவர்க்குள்ளத்து மில்லைப் புறத்தில்லைத் தானே.
உரைmeaning
உள்ளத்திற்கு உள்ளேயும் கலந்திருக்கின்றான், வெளியேயும் அனைத்திலும் கலந்திருக்கின்றான் என்று நம்புகின்றவர்களுக்கு, எமது உரிமையான இறைவன் உள்ளத்திற்கு உள்ளேயும் கலந்திருக்கின்றான், வெளியேயும் அனைத்திலும் கலந்திருக்கின்றான். உள்ளத்திற்கு உள்ளேயும் இல்லை, வெளியே எங்கும் இல்லை என்று நினைக்கின்றவர்களுக்கோ, உள்ளத்திற்கு உள்ளே உணரும்படியும் இல்லாமல், வெளியே எங்கும் அறிந்துகொள்ளும்படியும் இல்லாமல் இறைவன் இருக்கின்றான்.
To those who trust that he is mingled within the heart and mingled outside in all things, our own God is mingled within the heart and mingled outside in all things. But to those who think that he is not within the heart and not anywhere outside, God remains in such a way that he is not there within the heart to be felt, and not anywhere outside to be known.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உள்ளத்திற்கு உள்ளேயும் கலந்திருக்கின்றான், வெளியேயும் அனைத்திலும் கலந்திருக்கின்றான் என்று நம்புகின்றவர்களுக்கு,
To those who trust that he is mingled within the heart and mingled outside in all things,
- வரி 2Line 2
எமது உரிமையான இறைவன் உள்ளத்திற்கு உள்ளேயும் கலந்திருக்கின்றான், வெளியேயும் அனைத்திலும் கலந்திருக்கின்றான்.
our own God is mingled within the heart and mingled outside in all things.
- வரி 3Line 3
உள்ளத்திற்கு உள்ளேயும் இல்லை, வெளியே எங்கும் இல்லை என்று நினைக்கின்றவர்களுக்கோ,
But to those who think that he is not within the heart and not anywhere outside,
- வரி 4Line 4
உள்ளத்திற்கு உள்ளே உணரும்படியும் இல்லாமல், வெளியே எங்கும் அறிந்துகொள்ளும்படியும் இல்லாமல் இறைவன் இருக்கின்றான்.
God remains in such a way that he is not there within the heart to be felt, and not anywhere outside to be known.
திருமந்திரம் பாடல் #1532





