தொடர்ந்து படிக்கread this section continuously
உள்ளத்து ளேதானுகந் தெங்கு நின்றவன்வள்ளற் றலைவன் மலருறை மாதவன்பொள்ளற் குரம்பை புகுந்து புறப்படுங்கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே.
உரைmeaning
உயிர்களின் உள்ளத்திற்கு உள்ளே தானாகவே விரும்பி வீற்றிருக்கின்றவனும், அண்ட சராசரங்கள் எங்கும் நிறைந்து நிற்கின்றவனும், உயிர்களுக்குத் தேவையான அனைத்தையும் அருளுகின்ற வள்ளலும், அனைத்திற்கும் தலைவனும், உயிர்களின் நெஞ்சத் தாமரை மலரின் மேல் வீற்றிருக்கின்ற மாபெரும் தவத்தை உடையவனும், துவாரங்களைக் கொண்ட உடலுக்குள் கருவிலேயே புகுந்திருப்பவனும், அந்த உடலின் ஆயுள் முடியும்போது வெளியேறிச் செல்பவனும், இவை அனைத்தையும் மறைந்திருந்தே செய்கின்ற தலைவனும் ஆகிய இறைவனை அறிந்துகொள்ளும் முறையை, ஆசைகளுக்காகப் புற வழிபாடு செய்கின்றவர்கள் அறியாமல் இருக்கின்றார்கள்.
He who dwells of his own gladness within the heart of every living being; he who stands filling all the worlds and everything that moves and does not move; the generous one who grants living beings everything they need; the lord of all; the one of vast austerity who is seated upon the lotus of the heart of living beings; he who has entered the body full of openings from the womb itself; he who goes out of it when the span of that body is done; and the lord who does all of this while remaining hidden: this is God, and those who perform outward worship for the sake of their desires do not know the way to come to know him.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உயிர்களின் உள்ளத்திற்கு உள்ளே தானாகவே விரும்பி வீற்றிருக்கின்றவனும், அண்ட சராசரங்கள் எங்கும் நிறைந்து நிற்கின்றவனும்,
He who dwells of his own gladness within the heart of every living being, and he who stands filling all the worlds and everything that moves and does not move,
- வரி 2Line 2
உயிர்களுக்குத் தேவையான அனைத்தையும் அருளுகின்ற வள்ளலும், அனைத்திற்கும் தலைவனும், உயிர்களின் நெஞ்சத் தாமரை மலரின் மேல் வீற்றிருக்கின்ற மாபெரும் தவத்தை உடையவனும்,
the generous one who grants living beings everything they need, the lord of all, and the one of vast austerity who is seated upon the lotus of the heart of living beings,
- வரி 3Line 3
துவாரங்களைக் கொண்ட உடலுக்குள் கருவிலேயே புகுந்திருப்பவனும், அந்த உடலின் ஆயுள் முடியும்போது வெளியேறிச் செல்பவனும்,
he who has entered the body full of openings from the womb itself, and he who goes out of it when the span of that body is done,
- வரி 4Line 4
இவை அனைத்தையும் மறைந்திருந்தே செய்கின்ற தலைவனும் ஆகிய இறைவனை அறிந்துகொள்ளும் முறையை, ஆசைகளுக்காகப் புற வழிபாடு செய்கின்றவர்கள் அறியாமல் இருக்கின்றார்கள்.
and the lord who does all of this while remaining hidden: this is God, and those who perform outward worship for the sake of their desires do not know the way to come to know him.
திருமந்திரம் பாடல் #1531





