திருமூலர் அருளிய திருமந்திரம்
15. ஆயுள் பரிட்சை

மூன்றாம் தந்திரம் பாடல் 770–789 (20 பாடல்கள்)

வைத்தகை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில்உத்தம மிக்கிடில் ஓராறு திங்களாமத்த மிகுத்திட் டிரட்டிய தாயிடில்நித்தல் உயிர்க்கொரு திங்களில் ஓசையே

ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண்ஓசை யிறந்தவர் ஈசனை உள்குவர்ஓசை யிறந்தவர் நெஞ்சினுள் ஈசனும்ஓசை யுணர்ந்த வுணர்வது வாமே.

ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில்நாமே லுறைகின்ற நன்மை அளித்திடும்பூமேல் உறைகின்ற போதகம் வந்திடுந்தாமே உலகில் தலைவனு மாமே.

தலைவ னிடம்வலஞ் சாதிப்பார் இல்லைதலைவ னிடம்வல மாயிடில் தையல்தலைவ னிடம்வலந் தன்வழி யஞ்சில்தலைவ னிடம்வலந் தன்வழி நூறே.

ஏறிய வாறினில் எண்பது சென்றிடுந்தேறிய ஏழிற் சிறக்கும் வகையெண்ணில்ஆறொரு பத்தாய் அமர்ந்த இரண்டையுந்தேறியே நின்று தெளியிவ் வகையே.

இவ்வகை எட்டும் இடம்பெற ஓடிடில்அவ்வகை ஐம்பதே யென்ன அறியலாம்செவ்வகை ஒன்பதுஞ் சேரவே நின்றிடின்முவ்வகை யாமது முப்பத்து மூன்றே.

மும்மூன்றும் ஒன்றும் முடிவுற நின்றிடில்எண்மூன்றும் நாலும் இடவகை யாய்நிற்கும்ஐம்மூன்றும் ஓடி அகலவே நின்றிடிற்பன்மூன்றொ டீராறு பார்க்கலு மாமே.

பார்க்கலு மாகும் பகல்முப் பதுமாகில்ஆக்கலு மாகுமவ் வாறிரண் டுள்ளிட்டுப்போக்கலு மாகும் புகலற ஒன்றெனில்தேக்கலு மாகுந் திருத்திய பத்தே.

ஏயிரு நாளும் இயல்புற ஓடிடில்பாயிரு நாலும் பகையற நின்றிடும்தேய்வுற மூன்றுந் திகழவே நின்றிடில்ஆயுரு வாறென் றளக்கலு மாமேல்

அளக்கும் வகைநாலும் அவ்வழியே ஓடில்விளக்கும் ஒருநாலு மெய்ப்பட நிற்கும்துளக்கும் வகையைந்துந் தூய்நெறி ஓடில்களக்க மறமூன்றிற் காணலு மாமே.

காணலு மாகுங் கருதிய பத்தோடிற்காணலு மாகுங் கலந்த இரண்டையும்காணலு மாகுங் கலப்பற மூவைந்தேற்காணலு மாகுங் கருத்துற ஒன்றே.

கருதும் இருபதிற் காணஆ றாகும்கருதிய ஐயைந்திற் காண்பது மூன்றாம்கருதும் இருப துடன்ஆறு காணில்கருதும் இரண்டெனக் காட்டலு மாமே.

காட்டலு மாகுங் கலந்திரு பத்தேழில்காட்டலு மாகுங் கலந்தெழும் ஒன்றெனக்காட்டலு மாகுங் கலந்திரு பத்தெட்டிற்காட்டலு மாகுங் கலந்தஈ ரைந்தே.

ஈரைந்தும் ஐந்தும் இருமூன்றும் எட்டுக்கும்பார்அஞ்சி நின்ற பகை பத்துநாள் ஆகும்வாரம்செய் கின்ற வகை ஆறஞ்சு ஆமாகில்ஓர்அஞ்சொடு ஒன்று ஒன்று என ஒன்றும்தானே.

ஒன்றிய நாள்கள் ஒருமுப்பத் தொன்றாகிற்கன்றிய நாளுங் கருத்துற மூன்றாகுஞ்சென்றுயிர் நாலெட்டுஞ் சேரவே நின்றிடின்மன்றியல் பாகு மனையில் இரண்டே.

மனையில்ஒன் றாகும் மாதமு மூன்றுஞ்சுனையில்ஒன் றாகத் தொனித்தனன் நந்திவினையற வோங்கி வெளிசெய்து நின்றால்தனையுற நின்ற தலைவனு மாமே.

ஆரு மறியார் அளக்கின்ற வன்னியைஆரு மறியார் அளக்கின்ற வாயுவைஆரு மறியார் அழிகின்ற அப்பொருள்ஆரு மறியா அறிவறிந் தேனே.

அறிவது வாயுவொ டைந்தறி வாயஅறிவா வதுதான் உலகுயி ரத்தின்பிறிவுசெய் யாவகை பேணிஉள் நாடிற்செறிவது நின்று திகழு மதுவே.

அதுவரு ளும்மரு ளான துலகம்பொதுவரு ளும்புக ழாளர்க்கு நாளும்மதுவரு ளும்மலர் மங்கையர் செல்விஇதுவருள் செய்யும் இறைஅவ னாமே.

பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்திகுறிப்பது கூடிய கோலக் குரம்பைப்பழப்பதி யாவது பற்றறும் பாசம்அழப்படி செய்வார்க் ககலும் மதியே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #770

1 / 20

0:000:00
15. ஆயுள் பரிட்சைபாடல் 770

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com