திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 787

மூன்றாம் தந்திரம்15. ஆயுள் பரிட்சை

தொடர்ந்து படிக்கread this section continuously

அறிவது வாயுவொ டைந்தறி வாயஅறிவா வதுதான் உலகுயி ரத்தின்பிறிவுசெய் யாவகை பேணிஉள் நாடிற்செறிவது நின்று திகழு மதுவே.

உரை

மூச்சுக்காற்றின் இயக்கத்தை அறிந்துகொண்டால், எப்போதும் நிலையாக இருக்கும் ஐம்பொறிகள் எவையோ அதுவே உலகில் உயிர் என்று அறியப்படும். அந்த உயிர் உலகைவிட்டுப் பிரியாதவாறு அதற்குரிய முறைகளை அறிந்து அந்த வழியில் பேணிக் காத்தால், உயிர் உடம்பில் நிலைபெற்று இருக்கும்.

வரி வாரியாக

  • வரி 1

    மூச்சுக்காற்றின் இயக்கத்தை அறிந்துகொண்டால்,

  • வரி 2

    எப்போதும் நிலையாக இருக்கும் ஐம்பொறிகள் எவையோ அதுவே உலகில் உயிர் என்று அறியப்படும்.

  • வரி 3

    அந்த உயிர் உலகைவிட்டுப் பிரியாதவாறு அதற்குரிய முறைகளை அறிந்து,

  • வரி 4

    அந்த வழியில் பேணிக் காத்தால் உயிர் உடம்பில் நிலைபெற்று இருக்கும்.

திருமந்திரம் பாடல் #787

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout