தொடர்ந்து படிக்கread this section continuously
ஆரு மறியார் அளக்கின்ற வன்னியைஆரு மறியார் அளக்கின்ற வாயுவைஆரு மறியார் அழிகின்ற அப்பொருள்ஆரு மறியா அறிவறிந் தேனே.
உரைmeaning
உயிர் வாழ்வதற்கும் ஆயுளை அளந்து அறிவதற்கும் காரணமான நெருப்பையும் காற்றையும் அவற்றின் பெருமையை அறிந்தவர் உலகில் யாருமில்லை. அதனால் விரைவில் உடலை விட்டு நீங்கும் உயிரின் பெருமையையும் அறிந்தவர் யாருமில்லை. நான் இறைவனின் திருவருளால் அவ்விரண்டையும் அறியப் பெற்றேன்.
No one in the world knows the greatness of the fire and the wind that are the cause of life living and of measuring and knowing the span of life. So no one knows the greatness of the life that soon leaves the body either. By the grace of God, I have come to know both.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உயிர் வாழ்வதற்குக் காரணமாக இருக்கும் நெருப்பின் பெருமையை அறிந்தவர் உலகில் யாருமில்லை.
No one in the world knows the greatness of the fire that is the cause of life living.
- வரி 2Line 2
ஆயுளை அளந்தறிவதற்குக் காரணமான காற்றின் பெருமையையும் அறிந்தவர் யாருமில்லை.
Nor does anyone know the greatness of the wind that is the cause of measuring and knowing the span of life.
- வரி 3Line 3
அதனால் விரைவில் உடலை விட்டு நீங்கும் உயிரின் பெருமையையும் அறிந்தவர் யாருமில்லை.
So no one knows the greatness of the life that soon leaves the body, either.
- வரி 4Line 4
நான் இறைவனின் திருவருளால் அவ்விரண்டையும் அறியப் பெற்றேன்.
By the grace of God, I have come to know both.
திருமந்திரம் பாடல் #786





